Home
Mobile

பெரிய டிஸ்பிளேவுடன் அறிமுகமான பிரபல நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.

எச்டிசி நிறுவனம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே, ஆக்டோ கோர் பிராசஸர், நீண்ட நேரம் பேக்கப் தரும் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே போன் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை விபரங்களை வெளியிடவில்லை எச்டிசி நிறுவனம். மேலும் இப்போது இந்த புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரவாகப் பார்ப்போம்.

பெரிய டிஸ்பிளேவுடன் அறிமுகமான பிரபல நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்.!

அதாவது 6.82-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்டிசி போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Unisoc T606 12என்எம் பிராசஸர் உடன் Mali G57 MP1 GPU ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய எச்டிசி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த எச்டிசி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

இந்த புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்ளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

4600 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போனின் எடை 210 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

பெரிய டிஸ்பிளேவுடன் அறிமுகமான பிரபல நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்.!

ஏற்கனவே கூறியபடி,இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போன் விற்பனை விவரம் மற்றும் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை எச்டிசி நிறுவனம். இருந்தபோதிலும் இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HTC Wildfire E2 Play phone launched with 6.82-inch display: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X