குட்டியா க்யூட்டா கம்மி விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட்!

|

எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் 5.45 இன்ச் டிஸ்ப்ளே, இரட்டை பின்புற கேமராக்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

குட்டியா க்யூட்டா கம்மி விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட்!

எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5.45 இன்ச் டிஸ்ப்ளே, ஹீலியோ ஏ20 எஸ்ஓசி உடன் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, 3000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

HTC வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் கிடைக்கும் விலை குறித்து பார்க்கையில் அதன் இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.7,600 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ஒற்றை கருப்பு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

எச்.டி.சி வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் 5.45 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் 1440 x 720 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 மூலம் இயக்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. மேலும் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதிக்கு மெமரி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் 8 மெகாபிக்சல் முதன்மை கேமரா உட்பட இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
HTC Wildfire E Lite Announced with Android 10, Dual Camera at Budget Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X