Home
Mobile

ஐஸ் கிரீம் அப்டேஷனில் எச்டிசி விவிட் ஸ்மார்ட்போன்!

By Super

ஐஸ் கிரீம் அப்டேஷனில் எச்டிசி விவிட் ஸ்மார்ட்போன்!
மக்களின் நம்பிக்கையை பெற்ற எச்டிசி நிறுவனத்திடம் இருந்து பல புதிய தொழில் நுட்பங்களை மக்கள் எதிர் பார்த்து கொண்டே தான் இருக்கின்றனர். இந்த புதுமைகளை நிச்சயம் எச்டிசி விவிட் ஸ்மார்ட்போனிலும் பெறலாம்.

விவிட் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேஷன் வசதியை வழங்க உள்ளது. இதன் இயங்குதளம் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டதல்ல.

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள மற்ற வசதிகளும் அதிக வசதிகளை வழங்கும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 4.5 இஞ்ச் திரை வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் எஸ் எல்சிடி தொடுதிரை தொழில் நுட்பத்தினை கொண்டுள்ளதால் தெளிவான தகவல்களை பார்க்க முடியும்.

ஆட்டோ ஃபோக்கஸ் மற்றும் லெட் ஃபிளாஷ் வசதியினை கொடுக்கும் 8 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் இதில் இருப்பதால் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் இதில்பெறலாம். ஏனெனில் இதன் கேமரா அதிகபட்சமாக 3264 x 2448 பிக்ஸல் துல்லியத்தினை தரும்.

3ஜி, 4ஜி தொழில் நுட்பத்தின் மேல் அதிக ஆர்வம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த விவிட் ஸ்மார்ட்போனில் நல்ல வேட்டை என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஸ்மார்ட்போன் 3ஜி மற்றும் 4ஜி தொழில் நுட்பத்தினை சிறப்பாக வழங்கும்.

பல சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் கூடிய விரைவில் ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை வழங்க உள்ளது எச்டிசி. ஆனால் அப்டேஷன் தேதி பற்றிய எந்த விவரமும் இதில் கொடுக்கப்படவில்லை. இந்த ஆண்டில் இதன் புதிய ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வசதி அப்டேட் செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X