மிரண்டு போன மார்க்கெட்.. 50MP கேமரா.. 512GB மெமரி.. 60W சார்ஜிங்.. HTC 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ஹெச்டிசி நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஹெச்டிசி யு24 ப்ரோ (HTC U24 Pro) ஸ்மார்ட்போனை தான் தற்போது இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், ஒஎல்இடி டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஹெச்டிசி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஹெச்டிசி யு24 ப்ரோ அம்சங்கள் (HTC U24 Pro specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டூயல்-கர்வ்டு டிஸ்பிளேவை (OLED dual-curved display) கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹெச்டிசி யு24 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது ஹெச்டிசி யு24 ப்ரோ போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. பின்பு 2x ஆப்டிகல் ஜூம், ஏஐ அம்சம், 4கே வீடியோ பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போனின் கேமராக்கள். குறிப்பாக இன்-ஸ்கிரீன் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (in-screen fingerprint scanner) கொண்டுள்ளது இந்த ஹெச்டிசி மாடல்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஹெச்டிசி யு24 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 chipset) வசதியைக் கொண்டுள்ளது ஹெச்டிசி யு24 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்கஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
4600எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஹெச்டிசி யு24 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த பேடடரியை சார்ஜ் செய்ய 60 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (60W fast charging) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கும் இந்த ஹெச்டிசி போன்.

5ஜி (5G), வை-பை 6இ (Wi-Fi 6(E), டூயல் சிம் (dual SIM), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), என்எப்சி ( NFC), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB-C port), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 198 கிராம் ஆகும். ஸ்பேஸ் ப்ளூ மற்றும் ட்விலைட் ஒயிட் நிறங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும்.
ஆனால் ஹெச்டிசி யு24 ப்ரோ போன் தற்போது தைவானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஹெச்டிசி யு24 ப்ரோ போனின் விலை TWD 18,990 ( இந்திய மதிப்பில் ரூ.49,061)-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை TWD 20,999 (இந்திய மதிப்பில் ரூ.54,249)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications