108எம்பி ரியர் கேமரா, 5ஜி ஆதரவு கொண்ட ஸ்டைலான HTC ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை?
பிரபலமான எச்டிசி நிறுவனம் புதிய எச்டிசி யூ23 ப்ரோ(HTC U23 Pro) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன தரமான சிப்செட், குவாட் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்டிசி யூ23 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான எச்டிசி யூ23 ப்ரோ ஸ்மார்ட்போன்.

புதிய எச்டிசி யூ23 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் உடன் அட்ரினோ 644 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான எச்டிசி யூ23 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான எச்டிசி யூ23 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரே கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய எச்டிசி யூ23 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

4600 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த எச்டிசி யூ23 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் எச்டிசி யூ23 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி67 சான்றிதழ் பெற்றிருக்கிறது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் எடை 205 கிராம்.

காபி பிளாக், Muxer ஒயிட் நிறங்களில் இந்த எச்டிசி யூ23 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் தற்போது தைவானில் விற்பனைக்கு வந்துள்ளது. கூடிய விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த போனின் விலை TW$ 16,990 (ரூ.45,535).


Click it and Unblock the Notifications








