டூயல் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான எச்டிசி யூ12 பிளஸ்.!
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
எச்டிசி நிறுவனத்தின் அசத்தலான எச்டிசி யூ12 பிளஸ் புதிய மேம்பாடுகளுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதன்தின் டிஸ்பிளேவில் புதிய மாற்றங்கள் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது. எச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், எச்டிசி டிசயர் 12 ஆனது 185 யூரோவிலிருந்து (தோராயமாக ரூ.14,800) தொடங்கும்.

சிறிய மாறுபாடான டிசையர் 12 ஆனது ஒரு 5.5 அங்குல எச்டி + (720x1440 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேயு, 18: 9 என்கிற திரை விகிதம், 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி / 32ஜி அளவிலான உள்ளடக்க சேமிப்பு, மீடியா டெக் எம்டி6739 எஸ்ஓசி, மைக்ரோஎஸ்டி அட்டை வழியிலான மெமரி விரிவாக்கம், ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 2730எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

எச்டிசி யூ12 பிளஸ் ஆனது பெசல்-லெஸ் வடிவமைப்டன் வெளிவரும், அதன்பின்பு 3டி தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் டூயல் கேமரா இவற்றில் இடம்பெற்றுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
எச்டிசி யூ12 பிளஸ் பொறுத்தவரை 6.0-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2880x1440 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
யூ12 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி1016எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.அதன்பின்பு 8எம்பி108எம்பி டூயல் செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. யூ12 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3420எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எச்டிசி யூ12 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை கைரேகை சென்சார் மற்றும் பொக்கே எஃபெக்ட்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications