Home
Mobile

எச்டிசி U12+ ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும், அம்சங்களும் வெளியானது.!

வெளியான புகைப்படங்களில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சார்ந்த பெரும்பாலான விடயங்களை அறிய முடிகிறது. உடன் சில பிரதான அம்சங்களையும் காண முடிகிறது.

By Muthuraj

HTC நிறுவனத்தின் வரவிருக்கும் தலைமை ஸ்மார்ட்போன் ஆனது இந்த 2018-ஆம் ஆண்டின் மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அந்த ஸ்மார்ட்போன் HTC U12 என்கிற பெயரை பெறுமா அல்லது U12+ என்று அழைக்கப்படுமா என்கிற சந்தேகங்கள் உள்ளன.

எச்டிசி U12+ ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும், அம்சங்களும் வெளியானது.!

பெயர் பற்றிய குழப்பம் தான் உள்ளனவே தவிர, அம்சங்களில் எந்த குழப்பமும் இல்லை. கடந்த மாதம் வெளியான ஒரு ஆன்லைன் லீக்ஸ் வழியாக கூறப்படும் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் பல வெளியாகின. அதனைத்தொடர்ந்து தற்போது, ​​HTC U12 அல்லது U12+ ஸ்மார்ட்போனின் சில புகைப்படங்கள் கசிந்துள்ளன.

வெளியான புகைப்படங்களில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சார்ந்த பெரும்பாலான விடயங்களை அறிய முடிகிறது. உடன் சில பிரதான அம்சங்களையும் காண முடிகிறது.

HTC U12 அல்லது U12+ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் :

வெளியான படங்களானது, ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்பக்கத்தை தெளிவாக காட்டுவதால், ஒரு 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட டிஸ்பிளே மற்றும் பின்புற டூயல் கேமரா அமைப்பை காண முடிகிறது. அதன் வடிவமைப்பு பற்றி பேசுகையில், HTC U12 அல்லது U12+ ஸ்மார்ட்போன் ஆனது அதன் முன்னோடியான HTC U11+ போன்றே பின்புற பலகத்தில் ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது உடன் ஒரு வளைவான பின்புறத்தையும் கொண்டுள்ளது.

எச்டிசி U12+ ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும், அம்சங்களும் வெளியானது.!

மிக மெல்லிய பெஸல்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அதன் மேல் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பும் கொண்டு உள்ளது. முந்தைய லீக்ஸ் தகவலை அடிப்படையாக கொண்டு பார்த்தால், HTC U12 அல்லது U12+ ஆனது, 2880 x 1440 பிக்சல்கள் கொண்ட ஒரு 6 அங்குல க்வாட் எச்டி+ சூப்பர் எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆகியவைகளை கொண்டுருக்கும்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)

ஒளியியல் துறையை பொறுத்தவரை, 12எம்பி HTC UltraPixel முதன்மை கேமராவுடன், ஒரு 16எம்பி சென்சாருடன் இணைக்கப்பட்டு இருக்கலாம். அல்லது போக்கே விளைவு உடனான இரண்டு 8எம்பி கேமராக்களுடன் வெளியாகலாம்.

எச்டிசி U12+ ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும், அம்சங்களும் வெளியானது.!

செயற்கை நுண்ணறிவு திறன் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயங்குமென எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தவரை, ஒரு 3420mAh பேட்டரி, USB டைப்-சி போர்ட், ஐபி 68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு, 4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத் ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.

Best Mobiles in India

English summary
HTC U12 or U12+ Press Renders Leaked; Show Quad-Cameras and 18:9 Display. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X