ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியுடன் வெளிவரும் எச்டிசி யு12 லைஃப்.!
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி 10 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த எச்டிசி யு12 லைஃப் ஸ்மார்ட்போனின் பல்வேறு முக்கிய அம்சங்களைக் வெளியிட்டுள்ளது எச்டிசி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய மொபைல் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று
அந்நிறுவனம் சார்பில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்டிசி யு12 லைஃப் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த
எச்டிசி யு12 லைஃப் ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

எச்டிசி யு12 லைஃப்:
எச்டிசி யு12 லைஃப் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 6-இன்ச் குவாட் எச்டி பிளஸ் எல்சிஎடி டிஸ்பிளே அம்சம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2880 x 1440
பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இக்கருவி வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 636:
எச்டிசி யு12 லைஃப் சாதனம் 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன்636 ஆக்டோ-கோர் செயலியை அடிப்படையாக கொண்டு
வெளிவரும். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. லைட் சென்சார், ஜியோர்ஸ்கோப் சென்சார் போன்ற பல்வேறு சென்சார் அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஏஆர் ஸ்டிக்கர் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் கருப்பு மற்றும் தங்கம், நீலம் போன்ற நிங்களில் இந்த எச்டிசி யு12 லைஃப் ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications