6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன்.!
எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன் ஆனது மே மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சினாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எச்டிசி யூ12 :
எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
எச்டிசி யூ12 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன்845 குவால்காம் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் சிறந்த நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


16எம்பி ரியர் கேமரா:
இந்த எச்டிசி யூ12 ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
டூயல்-சிம், கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3500எம்ஏஎச்:
எச்டிசி யூ12 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications