டூயல் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான எச்டிசி யூ12.!
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி+16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி 5.99-இன்ச் க்யூஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2880 x 1440 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வெளிவரும்.

இக்கருவி 4ஜிபி /6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்டிசி யூ12 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி+16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத் 5, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

மேலும் எச்டிசி யூ12 ஸ்மார்ட்போனில் 3420எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஏப்ரல் மாதம் எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன் மாடல் வெளியிடப்படும் எனத் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications