சந்தை போட்டியை சமாளிக்க மேம்பாடுகளுடன் வருகிறது - ஹெச்டிசி யூ11 பிளஸ்.!

இந்த ஃபோனின் முன்பக்கம் மந்தமாக தெரிந்தாலும், பின்பக்கம் கிளாஸ் பாடி உடன் சிறப்பாக உள்ளது. சற்று கோணத்தை மாற்றினாலும் கிளாஸில் ஒளி பிரதிபலிப்பைக் காண முடிகிறது.

|

கடந்தாண்டில் நமது விருப்பத்தைப் பெற்ற ஆன்ட்ராய்டு ஃபோன்களில் ஒன்றான ஹெச்டிசி யூ11, தற்போதைய சந்தையில் உள்ள போட்டியை எதிர்கொள்ளும் வகையில், நீளமான 18:9 விகிதத்திலான திரை, கூடுதல் பேட்டரி திறன், நீர் மற்றும் தூசியில் இருந்து கூடுதல் பாதுகாப்பு என்று பல்வேறு மேம்பாடுகளுடன் ஹெச்டிசி யூ11 பிளஸ் என்ற பெயரில் களமிறங்கி உள்ளது. இது, Flipkart.com-ல் 56,990 என்ற விலை நிர்ணயத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

சந்தை போட்டியை சமாளிக்க மேம்பாடுகளுடன் வருகிறது - ஹெச்டிசி யூ11 பிளஸ்

புதிய ஹெச்டிசி யூ11பிளஸ் கூட, அதே நீர்ம தன்மைக் கொண்ட வடிவமைப்பே பெற்றுள்ளது. ஆனால் திரை அளவு மற்றும் பேட்டரி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே கையில் பயன்படுத்த சற்று கடினமாக உள்ளது. வளைந்த முனைகள் மற்றும் வட்ட வடிவிலான மூலைகளைக் கொண்ட ஹெச்டிசி யூ11 பிளஸ் ஃபோனில், பொத்தான் மற்றும் போர்ட் ஆகியவை பழைய இடங்களிலேயே உள்ளன. ஆனால் கைரேகை ஸ்கேன்னர் மட்டும் பின்பக்கத்தில் உள்ள கேமரா மோடூலுக்கு கீழே இடம்பெயர்ந்துள்ளது.

இந்த ஃபோனின் முன்பக்கம் மந்தமாக தெரிந்தாலும், பின்பக்கம் கிளாஸ் பாடி உடன் சிறப்பாக உள்ளது. சற்று கோணத்தை மாற்றினாலும் கிளாஸில் ஒளி பிரதிபலிப்பைக் காண முடிகிறது. இந்த கிளாஸ் வழுக்கும் தன்மைக் கொண்டதாக இருந்தாலும், பெரும்பாலான மெட்டல் பாடியைக் கொண்ட ஃபோன்களை விட வழுக்கல் குறைவாகவே உள்ளது.

ஹெச்டிசி யூசோனிக் ஹெட்போன்கள்

ஹெச்டிசி யூசோனிக் ஹெட்போன்கள்

ஃபோன் பாக்ஸில், டைப்-சி கனெக்டர் உடன் கூடிய ஹெச்டிசியின் யூசோனிக் ஹெட்போன்களில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி காணப்படுகிறது. மேலும் தரமான 3.5 மிமீ ஜெக் ஹெட்போன்கள் உடன் இணைக்க உதவும் ஒரு யூஎஸ்பி டைப்-சி 3.5மிமீ டாங்குல் உள்ளது.

நீர் மற்றும் தூசியில் இருந்து சிறந்த பாதுகாப்பு

நீர் மற்றும் தூசியில் இருந்து சிறந்த பாதுகாப்பு

பார்ப்பதற்கு ஹெச்டிசி யூ11 போலவே இருந்தாலும், நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாப்பு அளிப்பதில், ஐபி68 சான்றிதழை பெற்று, நீருக்குள் 5 அடி ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை தாக்குபிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே கொட்டும் மழையில் அல்லது நீச்சல் குளத்தில் புகைப்படம் எடுக்கவும் பாட்டு கேட்கவும் தயக்கம் தேவையில்லை.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஹெச்டிசி யூ11பிளஸ் ஃபோனிலும், முந்தைய ஐபிஎஸ் எல்சிடி பேனல் பயன்படுத்தப்பட்டாலும், திரையின் அளவு 6 இன்ச் ஆக அதிகரிக்கப்பட்டு, 18:9 என்ற விகிதத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த எல்சிடி திரை 1440 x 2880 பகுப்பாய்வை அளித்து, இன்ச் வீதம் 537 பிக்ஸல் திறனை வெளியிடுகிறது. இது டிசிஐ-பி3 விரிந்த நிற அளவில் அமைந்து, நிற முழுமையை அளிக்கிறது.

மேலும், இந்த எல்சிடி பேனல் மூலம் பல்வேறு கோணங்களிலும் கவர்ச்சிகரமான கான்ஸ்ட்ராஸ்ட் நிலைகளிலும் பார்க்க முடிகிறது. வெளிப்புறத்தில் இருந்து வரும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், கொரில்லா கிளாஸ் 5-ன் ஒரு அடுக்கு அளிக்கப்பட்டுள்ளது. திரையில் ஆல்வேஸ்-ஆன் வசதி அளிக்கப்பட்டுள்ளதால், ஃபோன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் அறிவிப்புகளைக் காணலாம்.

ஆடியோ செயல்பாடு

ஆடியோ செயல்பாடு

ஆடியோ விரும்பிகளைக் கவரும் வகையில், உயர்தர அலைவரிசை ஒலி உடன் கூடிய வூஃப்பர் அமைப்பு காணப்படுகிறது. இந்நிறுவனத்தின் யூசோனிக் இயர்போன்களில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்ஸலேஷன் உள்ளது. மேம்பட்ட சோனார் போன்ற தொழில்நுட்பம் மூலம் உங்கள் உள்காதுகளை ஆராய கூடிய டைப்-சி ஹெட்போன்கள், சோனி-யை தவிர மற்ற முன்னணி நிறுவனம் அளிக்க தவறும் சிறப்பான ஆடியோவை வழங்குகிறது.

மேலும் 4 ஒற்றை திசையை நோக்கிய வடிவமைப்பை கொண்ட மைக்ரோபோன்களை பயன்படுத்தும் 'அகவ்ஸ்டிக் ஃபோக்கஸ்' ஆடியோ தொழில்நுட்பம் மூலம் வீடியோ பதிவு செய்யும் போது, குறிப்பிட்ட காரியத்தின் சத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்து, சுற்றிலும் உள்ள பிற ஒலிகளைக் குறைக்க முடியும்.

கேமரா செயல்பாடு

கேமரா செயல்பாடு

ஹெச்டிசி யூ11-ல் இருந்த அதே 12 எம்பி ஒற்றை கேமரா அமைப்பே இதிலும் காணப்படுகிறது. இது பிஎஸ்ஐ சென்ஸரால் இயக்கப்படுகிறது. இந்த கேமரா பெரிய 1.4 µm பிக்ஸல்களைப் பயன்படுத்தி, எஃப்/1.7 துளையில் இயங்குகிறது. பின்பக்க கேமரா மூலம் இருண்ட சூழ்நிலைகளிலும் படமெடுக்க முடிகிறது.

பகல் ஒளி - குறைந்த ஒளி செயல்பாடு

பகல் ஒளி - குறைந்த ஒளி செயல்பாடு

பகல் நேரத்தில் எடுக்கப்படும் படங்கள் சிறப்பாக இருந்தாலும், கண்களால் காணும் அதே கச்சித தன்மையைப் பெற முடிவதில்லை. தானியங்கி ஹெச்டிஆர் மூலம் படங்கள் எடுக்கப்பட்டாலும், பெரிய வித்தியாசம் எதுவும் தெரிவதில்லை. பகல்நேரத்தில் 4கே வீடியோ எடுக்கும் போது, சிறப்பாக உள்ளது. இதில் உள்ள 8எம்பி கேமரா செல்ஃபீ படங்களை எடுக்கும் போது, சிறப்பான செயல்பாட்டை பெற முடிகிறது.

இந்த கேமராவை குறைந்த ஒளியில் பயன்படுத்துவதற்கு அவ்வளவு ஏற்றதாக தெரியவில்லை. கேமரா சென்ஸர் மூலம் படமெடுக்கப்பட்டாலும், அதில் தெளிவு காணப்படுவதில்லை. இதில் போர்ட்ரெய்ட் முறையும் இல்லை. இரண்டாவது கேமரா இல்லாததால், படத்தில் ஒரு ஆழமான தகவல்கள் தவறுகிறது.

ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர்

ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர்

இதில் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ உடன் ஹெச்டிசி சென்ஸ் ஹோம் யூஐ பதிப்பு 9.5 காணப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்னாப்டிராகன் 835 செயலி, 6ஜிபி ரேம் உடன் இணைந்து செயலாற்றுவதால், எந்தொரு பணியிலும் தயக்கமோ தாமதமோ ஏற்படுவதில்லை. அப்ளிகேஷன் ஏற்றம் உடனுடன் நடைபெறுவதோடு, ஸ்கீரின் நேவிகேஷன் முழு வேகத்தில் செயல்படுகிறது. பல பணிகளை ஒருங்கே செய்வதில் எந்த மந்த நிலையிலும் இல்லை. மேலும் கேம் ஆடுவதிலும் தடங்கல் எதுவும் ஏற்படுவதில்லை.

பேட்டரி மற்றும் இணைப்பு

பேட்டரி மற்றும் இணைப்பு

புதிய ஹெச்டிசி யூ11 பிளஸில் பேட்டரி திறன் 3,930எம்ஏஹெச் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதால், கடினமாக பயன்படுத்தினாலும் நாள் முழுவதும் தாக்குபிடிக்கிறது. கேம்கள் மற்றும் வீடியோ ஸ்டிரீமிங்கின் போது, அதிகளவு பேட்டரி கரைகிறது. ஆற்றல் சேமிப்பு முறை மூலம் மின்னஞ்சலைப் பெறுவது, ரிமோட் லாக் உள்ளிட்ட சில அம்சங்களின் பயன்பாட்டைக் குறைத்து, பேட்டரி திறனை நீட்டிக்க முடிகிறது.

இதில் 4ஜி வோல்டி, என்எஃப்சி, ப்ளூடூத் 5.0, யூஎஸ்பி 3.1 டைப்-சி போர்ட், வை-ஃபை மற்றும் ஹெச்டிசி கனெக்ட் ஆகியவை இணைப்பிற்கு பயன்படுகின்றன. இந்த ஃபோனில் 3.5 மிமீ ஹெட்போன் ஜெக் இல்லை. ஆனால் ஒரு யூஎஸ்பி டைப்-சி மூலம் 3.5மிமீ கனெக்டரை பயன்படுத்தி தரமான இயர்போன்கள் உடன் இணைக்க முடியும்.

முடிவு

முடிவு

இந்த ஃபோனில் ஒரு சிறப்பான 2கே திரை, கச்சிதமான ஆடியோ செயல்பாடு மற்றும் போர்ட்ரெய்ட் இல்லாவிட்டாலும் நல்ல கேமரா ஆகியவற்றைக் கொண்டு, பேட்டரி திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள சந்தையில், புதிய கேலக்ஸி ஃபோன்கள், திறமை வாய்ந்த பிக்ஸல் 2, ஒன்பிளஸ் 5டி மற்றும் ஹானர் வ்யூ 10 ஆகியவை உடன் இது போட்டியிட வேண்டியுள்ளது. எனவே ஒன்பிளஸ் 5டி போன்ற முன்னணி ஃபோன்களுக்கு ரூ.65 ஆயிரம் செலவு செய்ய நீங்கள் தயங்கினால், ஹெச்டிசி யூ11பிளஸ் உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
HTC U11 plus Review ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X