எச்டிசி யூ11 : இந்தியாவில் விரைவில் அறிமுகம்.!

|

எச்டிசி யூ11 ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் மாதம் இரண்டாவது வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது, இப்போது, நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இக்கருவி பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தெரிய வருகிறது.

எச்டிசி யூ11 : இந்தியாவில் விரைவில் அறிமுகம்.!

இருப்பினும் வலைத்தளம் கிடைக்கும் அல்லது சாதனத்தின் விலையினை வெளிப்படுத்தவில்லை. ஆனால் 'விரைவில் வரும்' என்ற விடயத்தை குறிப்பிடுகிறது, அதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு மிக அருகில் உள்ளது என்று அர்த்தம்.

இக்கருவி பிரில்லியன்ட் பிளாக் மற்றும் அமேசிங் சில்வர் என்ற வண்ண விருப்பங்களில் வரும் என்று வெளியான தகவல் தெரிவிக்கிறது. நினைவுகூர வேண்டுமெனில் இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக தைப்பி நகரில் தொடங்கப்பட்டது மற்றும் 749 யூரோ என்ற விலை நிர்ணயமும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விலையினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ரூ.50,000/- என்ற புள்ளியில் விலை நிர்ணயம் பெறலாம். சாதனத்தின் முக்கிய சிறப்பம்சமாக எட்ஜ் சென்ஸ் அம்சம் திகழ்கிறது. அம்சங்களை பொறுத்தம்மட்டில் 5.5 அங்குல க்வாட் எச்டி சூப்பர் எல்சிடி 5 காட்சியை 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் (2560 x 1440 பிக்சல்கள் திரை தீர்மானம்) கொண்டிருக்கிறது. இது சமீபத்திய குவால்காம் ஸ்னாப் மூலம் இயங்கும் 835 செயலி அட்ரெனோ 540 ஜிபியூ உடனான 2.4ஜிகாஹெர்ட்ஸ் கொண்டு இயங்கும்.

எச்டிசி யூ11 : இந்தியாவில் விரைவில் அறிமுகம்.!

இந்தியாவில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்க ஆதரவு கொண்ட மாடல் அறிமுகப்படுத்தப்படும். மறுபக்கம் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு கொண்ட ஒரு மாறுபாடும் உள்ளது.

கேமரா துறையை பொறுத்தமட்டில் ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா ஆனது 4கே பதிவு ஆதரவு, எல்இடி பிளாஷ் மற்றும் முகம் கண்டறிதல் ஆகிய அம்சங்களுடன் வருகிறது. முன்பக்கம் 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இக்கருவி சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. 3000 எம்ஏஎச் பேட்டரித்திரன் கொண்டுள்ள இக்கருவி 24.5 மணி நேர பேச்சுநேரம் மற்றும் 14 நாட்கள் வரை காத்திருப்பு நேரத்தை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது. கலப்பு இரட்டை சிம் ஸ்லாட் (நானோ சிம்) கொண்ட இக்கருவி ப்ளூடூத் 4.2, வைஃபை, என்எப்சி4ஜி, யூஎஸ்பி 3.1 ஜென் 1 டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் / ஏஜிபிஎஸ், க்ளோநாஸ் மற்றும் பல இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
HTC U11 to launch in India soon. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X