டூயல் செல்பீ கேம், 6 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் எச்டிசி யூ11 ஐஸ்.!

|

எச்டிசி நிறுவனமானது தைவான் மற்றும் சீனாவில் அதன் சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன யூ11 ஐஸ் என்கிற ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. ரூ.32,020/- என்கிற இந்திய விலை நிர்ணயத்தில் தைவானில் வெளியாகியுள்ள இக்கருவி தற்போது முன்பதிவுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் ஷிப்பிங் ஆனது வருகிற பிப்ரவரி 1 முதல் தொடங்கும்.

டூயல் செல்பீ கேம், 6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் எச்டிசி யூ11 ஐஸ்.!

சீனாவை பொறுத்தமட்டில் இக்கருவி ஏறத்தாழ ரூ.32,524/- என்கிற இந்திய விலை மதிப்பை பெற்று முன்பதிவுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அங்கு ஷிப்பிங் ஆனது ஜனவரி 25 முதல் தொடங்கும். வெள்ளி, சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாக காண்போம்.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

எச்டிசி யூ11 ஐஸ் ஆனது 6 இன்ச் முழு எச்டி + சூப்பர் எல்சிடி 3 டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் 18: 9 என்கிற திரை விகிதமானது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 1080 x 2160 பிக்சல்கள் என்கிற திரை தெளிவுத்திறனை கொண்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி

அட்ரெனோ 510 ஜிபியூவ் உடன் இணைந்து சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 652 ஆக்டா செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது உடன் மைக்ரேஎஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்கும் ஆதரவும் கொண்டுள்ளது.

12 மெகாபிக்சல் பின்புற கேமரா

12 மெகாபிக்சல் பின்புற கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், 4கே பதிவு, ஆட்டோ போகஸ், இரட்டை எல்இடி ப்ளாஷ், ஓஐஎஸ், எப் / 1.7 துளை மற்றும் பேஸ் டிடெக்ஷன் ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
5 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல்

5 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல்

முன்பக்கத்தில், எபி / 2.2 துளை, 80 டிகிரி அகல கோண லென்ஸ்கொண்ட 5 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல் என்கிற இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. எச்டிசி-யின் தனியுரிம சென்ஸ் ஸ்கின் உடனான ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவியில்ஒலி குறைப்பிற்கான யூசோனிக் ஆடியோ தொழில்நுட்பம் உள்ளது.

3930எம்ஏஎச் பேட்டரி

3930எம்ஏஎச் பேட்டரி

தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கான ஐபி67 சான்றிதழ் கொண்டுள்ள இந்த சாதனம், க்வால்காம் பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரவும் கொண்ட ஒரு 3930எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்குகிறது. ப்ளூடூத் 4.2, வைஃபை, இரட்டை சிம் ஸ்லாட், 4 ஜி எல்டிஇ , யூஎஸ்பி 2.0 டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் / ஏஜிபிஎஸ், மற்றும் என்எப்சி ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

பயனரின் மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தின் கீழ் இக்கருவி ஒரு கைரேகை சென்சாரை கொண்டுள்ளது. அளவீட்டில் 157.9 x 74.99 x 8.5 மிமீ மற்றும் 185 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது. சென்சார்களை பொறுத்தமட்டில், காம்பஸ் மேக்னெடோமீட்டர், அக்ஸலேரோமீட்டர், ஆம்பியன் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் ஆகியவைகளை தன்னுள் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HTC U11 EYEs launched with 6-inch Full HD+ display and dual selfie cameras. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X