ஜனவரி 15 : டூயல் செல்பீ கேமராவுடன் புதிய எச்டிசி யூ11 ஐஸ் அறிமுகம்.!
எச்டிசி யூ11 ஐஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 அல்லது ஸ்னாப்டிராகன் 653 சிப்செட் வழங்கப்படலாம். அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எச்டிசி யூ11 ஐஸ் ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜனவரி 15-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, எச்டிசி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனில் அட்டகாசமான டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் எச்டிசி யூ11 ஐஸ் ஸ்மார்ட்போன் மாடல். மக்கள் அதிகம் விரும்பும் பெசல்-லெஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். எச்டிசி யூ11 ஐஸ் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எச்டிசி யூ11 ஐஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு சமீபத்தில், எச்டிசி 2க்யூ4ஆர்400 என்கிற மாடல் எண் கொண்ட சாதனம், சீனாவில் 3சி சான்றிதழைப் பெற்றது, இது எச்டிசி ஓஷன் ஹார்மனியாக இருக்கலாமென கூறப்படுகிறது. மேலும் இந்த எச்டிசி யூ11 ஐஸ் ஸ்மார்ட்போனில் செல்பீ கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எச்டிசி யூ11 ஐஸ் :
எச்டிசி யூ11 ஐஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம்
கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு :
எச்டிசி யூ11 ஐஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 அல்லது ஸ்னாப்டிராகன்653 சிப்செட் வழங்கப்படலாம். அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

செல்பீ :
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய டூயல் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3930எம்ஏஎச்:
எச்டிசி யூ11 ஐஸ் ஸ்மார்ட்போனில் 3930எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
எச்டிசி யூ11 ஐஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.35.000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications