நம்பமுடியாத விலைக்குறைப்பில் விற்பனைக்கு வரும் எச்டிசி யு அல்ட்ரா.!
எச்டிசி யு அல்ட்ரா பொறுத்தவரை குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது, அந்த வரிசையில் எச்டிசி யு அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.22,991-வரை விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

எச்டிசி யு அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முந்தையவிலை ரூ.52,990-ஆக இருந்தது, இப்போது ரூ.22,991-வரை விலைக்குறைப்பு செய்யப்பட்டு ரூ.22,991-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை தற்போது பிளிப்கார்ட் மற்றும் ஆன்லைன் தளங்களில் வாங்க முடியும்.

5.7-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.7-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-2560)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 821;
எச்டிசி யு அல்ட்ரா பொறுத்தவரை குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, கைரேகை ஸ்கேனர், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
எச்டிசி யு அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications