ஆற்றல் வாய்ந்த குவாட் கோர் பிராசஸருடன் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்!

Posted By: Staff
ஆற்றல் வாய்ந்த குவாட் கோர் பிராசஸருடன் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்!
சிறந்த மொபைல் நிறுவனங்களை பற்றி கூறுகையில் எச்டிசி பற்றி கூறுவதை தவிர்க்க முடியாது. அந்த அளவு இதன் தொழில் நுட்பத்துடன் மக்கள் வெகுவாக பழகிவிட்டனர். இந்நிறுவனம் புதிய குவாட் கோர் பிராசஸர் வசதி கொண்ட 2 ஸ்மார்ட்போன்களை வழங்க இருக்கிறது.

இது போன்ற சிறந்த மற்றும் புதுமையை கொண்ட தொழில் நுட்பங்கள் நிச்சயம் மக்களின் வரவேற்பை பெறும் என்பது அனைவரும் நன்கு அறிந்த விஷயம். இந்த ஆண்டு மொபைல் கண்காட்சி லாஸ் வேகாஸ் நகரில் நடக்க இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் நிச்சயம் குவாட் கோர் பிராசஸர் வசதி கொண்ட எச்டிசியின் இந்த புதிய 2 ஸ்மார்ட்போன்களும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

எச்டிசி குவாட் கோர் பிராசஸர் வசதி கொண்ட ஸ்மார்ட்போனை வழங்குவது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் கொடுக்கும். இந்நிறுவனத்தின் மற்ற மொபைல்களையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் எல்லா மொபைல்களிலுமே சிறந்த வசதியினை வழங்கி வருகிறது எச்டிசி.

இந்த ஸ்மார்ட்போன்களில் குவாட் கோர் பிராசஸர் கொண்ட புதிய 2 ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot