16 மெகா பிக்ஸல் கேமராவுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்!

By Super
|

16 மெகா பிக்ஸல் கேமராவுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்!
குறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற நிறுவனம் எச்டிசி என்று பெருமையுடன் சொல்லலாம். டைட்டன்-II என்ற ஸ்மார்ட்போனை எச்டிசி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பல வசதிகளுடன் வெளிவரும். இது விண்டோஸ்-7 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.

இந்த ஓஎஸ் சிறப்பாக இயங்க இதில் பவர்ஃபுல் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. 4.7 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொடுக்கும். இந்த கம்பீரமான திரையினால் 480 X 800 பிக்ஸல்

துல்லியத்தினை பெற முடியும். எதையும் தெளிவாக காணவே இந்த அகன்ற திரை வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் பேசப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இதன் கேமரா. இதில் 16 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஃபோக்கஸ், டிஜிட்டல் சூம், ஜியோ டேகிங், ஐஎஸ்ஓ கன்ட்ரோல் போன்ற தொழில் நுட்பங்களையும் இந்த ஸ்மார்ட்போனில் பெற முடியும்.

இது மட்டும் அல்லாது 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் முகப்பு கேமராவும் இதில் உள்ளது. ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பங்களை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் 3ஜி மற்றும் 2ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட்

செய்யும்.

இத்தனை உயர்ந்த ரக வசதிகள் இருக்கையில் இதன் பேட்டரியும் நிச்சயம் சிறந்த வசதியினை தான் வழங்கும். இது 1730 எம்ஏஎச் பேட்டரியை பெற்றது. அதனால் டாக் டைம், ஸ்டான்-பை டைம் போன்ற வசதிகள் பற்றி கோட்கவே வேண்டாம். பேசுவதற்கு அதிக நேரத்தினை வழங்கும்.

டைட்டன்-2 ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்பங்களின் மூலம் சிறப்பாக செயல்படும் என்று தாராளமாக கூறலாம். தொழில் நுட்பங்கள் எப்படி முக்கியமானதோ அது போல விலையும் முக்கிய இடத்தை பெறுகிறது. இதன் விலையை அறிந்து கொள்ள இன்னும் சில நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more