உள்ளம் உருக வைக்கும் ஐஸ்கிரீம் சான்ட்விஜ் அப்டேட் பெறும் எச்டிசி சென்சேஷன்!

தற்சமயம் புதிய ஸ்மார்ட்போனை வழங்குவதைவிட, புதிய புதிய தொழில் நுட்பங்களை அப்டேட் செய்வது வாடிக்கையாகிவிட்டது. ஏனென்றால் மக்கள் புதிய தொழில் நுட்பம் ஏதேனும் அறிமுகமானால் அந்த தொழில் நுட்பத்தை தன்னுடைய மொபைலில் பெற வேண்டும் என்று ஆவல் கொள்கின்றனர்.
இதை புரிந்து கொண்டு நிறுவனங்களும் புதிய வசதிகளை மொபைல்களில் அப்டேட் செய்யும் வசதியினை கொடுக்கின்றன. ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விஜ் ஓஸ் சாப்ட்வேர் பெரும்பாலான வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகின்றது.
தனது புதிய படைப்பான சென்சேஷன் ஸ்மார்ட்போனில் ஐஸ்கிரீம் சான்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்ய இருக்கிறது எச்டிசி. சென்சேஷன் ஸ்மார்ட்போனில் இந்த ஐஸ்கிரீம் சேன்ட்விச் ஓஎஸ் அப்டேட் வசதியினை வரும் ஆண்டு துவக்கத்தில் எச்டிசி சர்வதேச அளவில் வழங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
எச்டிசி சென்சேஷனில் ஸ்மார்ட்போனில் கிடைக்கும் இந்த புதிய ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விஜ் மூலம் எக்ஸ்டிஏ டெவலப்பர் வெப்சைட் வசதியினையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த புதிய ஓஎஸ் வசதி நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications