எல்ஜி ஆப்டிமஸ் ப்ளாக் ,எச்டிசி சல்சா ஓர் அலசல் ஒப்பீடு!

Posted By: Staff

எல்ஜி ஆப்டிமஸ் ப்ளாக் ,எச்டிசி சல்சா ஓர் அலசல் ஒப்பீடு!
இரண்டு நட்சத்திர நிறுவனங்களுக்கிடையில் அனல் பறக்கும் போட்டி. எச்டிசி சல்சா பந்தையக் குதிரை போல் போட்டிக்கு தயாராகிவிட்டது. எல்ஜி ஆப்டிமஸில் உள்ள அதே 2ஜி மற்றும் 3ஜி வசதியை வழங்குகிறது எச்டிசி சல்சா. ஆனால் எச்டிசி சல்சாவின் விலை எல்ஜியின் விலையை விடக் குறைந்ததாகத் தெரிகிறது.

குறைந்த விலையில் அதிகத் தொழில் நுட்பத்தை வழங்கிறது எச்டிசி நிறுவனம். இரண்டு மாடல்களுமே பார்ப்பவர்களைத் தன் வசம் இழுக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்ஜி ஆப்டிமஸ் ப்ளாக் 109 கிராம் எடையும், எச்டிசி சல்சா 120 கிராம் எடையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களுமே மிகவும் இலகுவான எடையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆப்டிமஸ் ப்ளாக் ஸ்லீக் ஐபிஎஸ் எல்சிடி 4.0 இஞ்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்டது.எச்டிசி சல்சா 3.4 இஞ்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரீன் 320 X 480 பிக்ஸல் ரிசல்யூஷன் கொண்டது.இந்த அழகான இரண்டு மாடல்களுமே கொரில்லா க்ளாஸ் டிஸ்ப்ளே, ஆக்சிலோமீட்டர்ஸ் மற்றும் பிராக்ஸிமிட்டி சென்சார் வசதி கொண்டதாக உள்ளது.

ஆப்டிமஸ் ப்ளாக் மாடலில் வி 2.0 ஆப்டிமஸ் யூஸர் இன்டர்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்டிமஸ் எல்ஜி மாடலில் கொடுக்கப்பட்டடுள்ள இன்டர் ஃபேஸ் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயனை அளிக்கிறது.

ஆப்டிமஸ் எல்ஜி 3.5மிமீ ஆடியோ ஜேக் உள்ளது. அதே போல் எச்டிசி சல்சாவிலும் சிறந்த சவுன்ட் க்வாலிட்டி உள்ளது. இதனால் துல்லியமாகவும்,தெளிவாகவும் பாடல்களை கேட்கலாம்.

மொபைல் என்றாலே அதன் முக்கிய அம்சம் பேட்டரி. எச்டிசி மாடலில் 1520 எம்ஏஹெச் பேட்டரியும்,எல்ஜி ஆப்டிமஸ் மாடலில் 1500 எம்ஏஹெச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு புதிய மாடல்களிலுமே ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் டெக்னாலஜி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நெட் சம்மந்தமான வேலைகளை எளிதில் முடிக்கலாம். ஆப்டிமஸ் எல்ஜி, எச்டிசி சல்சா இந்த இரண்டு உன்னதமான மாடல்களிலுமே 7.2 எம்பிபிஎஸ் வேகத்தில் டவுண்லோடு செய்யலாம்.

எல்சி ஆப்டிமஸ் ப்ளாக், சிலவர், ஒயிட் மற்றும் பிரவுன் நிறங்களிலும் கிடைக்கும். எச்டிசி சல்சா கறுப்பு, சில்வர், லில்லாக் போன்ற நிறத்திலும் கிடைக்கும். எல்ஜி ஆப்டிமஸ் ப்ளாக் ரூ.19,500 விலையிலும், கிட்டத்தட்ட அதே வசதிகளைக் கொண்ட எச்டிசி சல்சாரூ.15,000 விலையிலும் கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot