எச்டிசி ரூபி டேப்லெட் போன் - சிறப்பு தகவல்கள்

ரூபி என்ற பெயரில் உயரிய வகை டேப்லெட் போன் ஒன்றை எச்டிசி நிறுவனம் வடிவமைத்து வருகிறது. அதற்குள் இந்த போனை பற்றிய தகவல்கள் இணையதள காற்றில் பறக்க துவங்கிவிட்டது. பிரபல இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த தகவல்களை வைத்து பார்த்தால், ஏற்கனவே எச்டிசி அறிமுகப்படுத்திய ப்ளையர் டேப்லெட் ஸ்மார்ட்போனை ஒத்த வடிவமைப்பை கொண்டதாகவே இந்த போன் இருக்கும் என்று தெரிகிறது.
டியூவல் ப்ளாஷ், 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய 8 மெகாபிக்செல் கேமராவுடன் இது வர இருக்கிறது. இந்த போன் ஆன்ட்ராய்டு அல்லது மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாப் கிளாஸ் மல்டிமீடியபா பொழுதுபோக்கு அம்சங்களுடன் வரும் இந்த போனுக்கான விலை மற்றும் சிறப்பம்சங்களை எச்டிசி நிறுவனமே விரைவில் அறிவிக்கும் என அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications