ஸ்க்ராட்ச் ப்ரீ கவருடன் எச்டிசி வழங்கும் புதிய பட்ஜெட் போன்

உயர்ந்த தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மொபைல் எச்டிசி ரீசவுன்டு. இப்பொழுது அஃபீஷியல் அக்சஸரீஸ் வசதியையும் கொடுக்கும்.
இந்த மொபைலுக்கு ஓர் அற்புதமான பாதுகாப்புக் கவசத்தையும் உருவாக்கியிருக்கிறது எச்டிசி நிறுவனம்.
பொதுவாக வாட்டர் ப்ரூஃப் தொழில் நுட்பம் மொபைலில் தான் இருக்கும். ஆனால் இங்கு வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்ட மொபைல் கவரை வழங்குகிறது எச்டிசி நிறுவனம்.
இந்த கவர் மிக நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பாதுகாப்புப் பெட்டகத்துக்குள் உங்கள் மொபைலை, பொக்கிஷம் போல் பாதுகாத்து கொள்ளலாம்.
மொபைலை தண்ணீரி்ல் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த மொபைல் கவர் லெதர், சிலிக்கான், நியோபிரென் பவுச்சஸ் என்று விதவிதமாக கண்கவரும் வகையில் உள்ளது.
இது போன்ற கவர்களை ரூ.500 விலையில் இருந்து ரூ.2,000 விலை வரையில் பெற முடியும்.
இந்த கவர்கள் அழகினை வழங்குவதோடு மட்டும் அல்லாம் பாதுகாப்பினையும் அளிக்கிறது. அதனால் இதனை 2 இன் 1 வசதி கொண்ட மொபைல் கவர் என்றும் கூறலாம்.
இதில் உள்ள டாக் அப்ளிகேஷன் வசதிகள் மூலம் இந்த மொபைலை டேபில் க்ளாக் போன்றும், மியூசிக் ப்ளேயர் போன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதோடு எச்டிசி ரீசவுன்டு மொபைலில் இன்னும் ஒரு கூடுதல் வசதியும் இருக்கிறது. அதிக நேரம் நீடித்து உழைக்கும் பேட்டரி வசதியும் இதில் உள்ளது.
இதனால் அதிக டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைம் வசதியினையும் பெற முடியும்.
ஆனால் இதை விடவும் அதிக நேரம் நீடித்து உழைக்கும் பேட்டரி வேண்டும் என்னறால் 2,750 எம்ஏஎச் பேட்டரியை இதில் பொருத்திக் கொள்ளலாம். இந்த பேட்டரி ரூ.2,000 விலையில் கிடைக்கும்.
அதுமட்டும் அல்லாது இதில் யூஎஸ்பி வால் சார்ஜர், கார் சார்ஜர், இன்டர்நேஷனல் டிராவல் சார்ஜர் போன்றவற்றையும் பெற்று பயனடைய முடியும்.
இந்த அக்சஸரீஸ் வசதிகள் மட்டும் அல்லாது, புளூடூத், போர்டபில் ஸ்பீக்கர்கள், மெமரி கார்டு, ஹெட்செட் போன்ற அக்சஸரீஸ்களும் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications