Just In
- 6 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 8 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 8 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 9 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
ஷோகேஷில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகை மாயம்.. திருடன் என சிசிடிவி காட்சிகளை பார்த்தால்.. ட்விஸ்ட்!
- Movies
சிம்பு பிறந்தநாளில் பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள்.. இசையில் தெறிக்கவிடப் போகும் ஏஆர் ரஹ்மான்
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அதிரடியாக களமிறங்கும் 2 புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்கள்!

இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே விண்டோஸ் இயங்குதளம் கொண்டதாக இருக்கும். சமீபத்தில் விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் எலக்ட்ரானிக் சாதன சந்தையில் அறிமுகமான வண்ணமே இருக்கிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு இருக்கும் என்று தோன்றுகிறது. எச்டிசி 8எஸ் ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை கொண்டதாக இருக்கும். இதில் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் வேகமான செயல்பாட்டினை எளிதாக பெற முடியும்.
இந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் டியூவல் கேமரா வசதியினை வழங்கும். 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் வீடியோ காலிங் செய்ய உதவும் முகப்பு கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக பயன்படுத்தலாம். எப்போதுமே எச்டிசி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் தொடுதிரை வசதி சிறப்பான செயல்பாட்டினை கொண்டதாக இருக்கும். 16 ஜிபி மெமரி ஸ்டோரேஜ் வசதியை கொடுக்கும் இந்த 8எஸ் ஸ்மார்ட்போனின் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும்.
வைபை நெட்வொர்க் வசதியை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் என்எஃப்சி தொழில் நுட்பத்தினையும் அளிக்கும். இது போன்ற சிறப்பான வசதிகளை கொடுக்க நீடித்து உழைக்கும் பேட்டரியும் இதில் வழங்கப்படும்.
எச்டிசி 8எஸ் ஸ்மார்ட்போனை விடவும் பெரிய திரையினை எச்டிசி 8எக்ஸ் ஸ்மார்ட்போனில் பெறலாம். 8எக்ஸ் ஸ்மார்ட்பனில் 4.3 இஞ்ச் அகன்ற திரையினை பயன்படுத்தி தகவல்களையும், புகைப்படங்களையும் தெளிவாக பார்க்கலாம். இது எல்சிடி திரை தொழில் நுட்ப வசதியினை கொடுக்கும். 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்ததில் இயங்கும் 2 க்ரெய்ட் கோர் பிராசஸர் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் போன்றவற்றை பெறலாம்.
பிஎஸ்ஐ சென்சார் இமேஜ் சிப் தொழில் நுட்பம் போன்றவற்றை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமரா, 2.1 மெகா பிக்ஸல் முகப்பு கேமாரவை இதில் எளிதாக பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போனின் இன்பில்ட் மெமரி 16 ஜிபி ஆகும். இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் 32 ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்தி கொள்ள உதவுகிறது.
1,800 எம்ஏஎச் பேட்டரி, வைபை மற்றும் என்எப்சி போன்ற தொழில் நுட்பங்களை சிறப்பாக வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்துவிடும் போல தான் தெரிகிறது.
8எஸ் ஸ்மார்ட்போன் டாமினோஸ், ஃபீஸ்டா ரெட், அட்லான்டிக் ப்ளூ, ஹை-ரைஸ் க்ரே ஆகிய வண்ணங்களில் பெறலாம். 8எக்ஸ் ஸ்மார்ட்போன் கலிஃபோர்னியா ப்ளூ, கிராஃபைட் ப்ளேக், ஃப்ளேம் ரெட் மற்றும் லைம்லைட் எல்லோ ஆகிய வண்ணங்களை கொண்டதாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470