Home
Mobile

எச்டிசி 4ஜி ஸ்மார்ட்போன்கள்: ஓர் அலசல் ஒப்பீடு

By Super

எச்டிசி 4ஜி ஸ்மார்ட்போன்கள்: ஓர் அலசல் ஒப்பீடு
புதுமையை புகுத்தும் நிறுவனங்களில் எச்டிசி முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உண்மை தான். எண்ணிலடங்கா மொபைல்களையும், ஸ்மார்ட்போன்களையும் எச்டிசி நிறுவனம் கொடுத்து நிருபித்து இருக்கிறது. ரேடார்-4ஜி மற்றும் விவிட்-4ஜி ஸ்மார்ட்போன்கள் அதி நவீன தொழில் நுட்பங்களை கொண்டுள்ளது.

ஜிஎஸ்எம் வசதி கொண்ட இந்த எச்டிசி 4ஜி ஸ்மார்ட்போன் 3.8 இஞ்ச் எஸ்-எல்சிடி மல்டி தொடுதிரை வசதி கொண்டது. 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும் இந்த மொபைலில் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. எச்டிசி விவிட் 4ஜி ஸ்மார்ட்போனும் அடிப்படையில் ஜிஎஸ்எம் தொழில் நுட்பம் கொண்டது தான். இதில் 4.5 இஞ்ச் எஸ்-எல்சிடி மல்டி தொடுதிரை வசதியையும் பயன்படுத்தலாம். இந்த திரை மூலம் 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம்.

எச்டிசி ரேடார் 4ஜி ஸ்மார்ட்போன் விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. 1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியான் பிராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் கியூவல்காம் எம்எஸ்எம்8255 ஸ்னாப்டிராகன் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அட்ரினோ 205 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.

எச்டிசி விவிட் 4ஜி ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3.4 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு இயக்கும். கியூவல்காம் ஏபிகியூ8060 ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் டியூவல் கோர் 1.2 ஜெகாஹெர்ட்ஸ் பிராசஸரும் எச்டிசி விவிட் 4ஜி ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அட்ரினோ 220 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் எல்டிஇ தொழில் நுட்பத்துடன் கூடிய 3ஜி வசதியினையும், ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்ப வசதியினையும் எளிதாக பயன்படுத்த முடியும்.

எத்தனை வசதி கொண்ட ஸ்மார்ட்போனாக இருந்தாலும் அதன் கேமரா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எச்டிசி ரேடார் ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், விஜிஏ செகன்டரி கேமராவும் உள்ளதால் புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங், வீடியோ கான்ஃபிரன்சிங் வசதியினையும் பெற முடியும்.

எச்டிசி விவிட் ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் செகன்டரி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால் 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது. இதன் 1520 எம்ஏஎச் பேட்டரி 2ஜி வசதிக்கு 10 மணி நேரம் டாக் டைமையும், 3ஜி வசதிக்கு 8 மணி நேரம் டாக் டைம் வசதியினையும் கொடுக்கும்.

இப்படி அதி நவீன வசதிகளை அள்ளி தரும் எச்டிசி ரேடார் 4ஜி ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ.25,000 விலையிலும், எச்டிசி விவிட் 4ஜி ஸ்மார்ட்போன் 32,000 விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X