Home
Mobile

சூப்பர் தொழில் நுட்பத்துடன் எச்டிசி பிரைமோ ஸ்மார்ட்போன்!

By Super

சூப்பர் தொழில் நுட்பத்துடன் எச்டிசி பிரைமோ ஸ்மார்ட்போன்!
2012-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் பல அரிய வகை தொழில் நுட்பம் கொண்ட மொபைல்கள் வெளியாக உள்ளது. இந்த கண்காட்சியில் எச்டிசி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான பிரைமோவும் அறிமுகமாக உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய எச்டிசி ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதில் 3.7 இஞ்ச் சூப்பர் அமோல்டு தொடுதிரை வசதியும் கிடைக்கும். இந்த உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனுக்கு பாதுகாப்பு கவசமாக கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், அதி வேகத்தில் இயங்க 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரும் இதில் உள்ளது. இயங்குதளத்திற்கு பிறகு அனைவரும் கவனம் செலுத்துவது அதன் கேமராவில் தான். அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த 5 மெகா பிக்ஸல் கேமராவை கொடுக்கும்.

இந்த எச்டிசி பிரைமோ ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரைமோ ஸ்மார்ட்போனின் விவரம் பற்றி அறிய மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சி வரும் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X