புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வாங்குவதற்கு எச்டிசி திட்டம்

எச்பி நிறுவனத்தின் பாம் வெப் ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தின் மீது எச்டிஎஃசியின் பார்வை பதிந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் அது எந்த அளவு உண்மை என்று சரியாகத் தெரியவரவில்லை. சிறந்த ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தைப் பெறுவதற்கு எச்டிசி எந்த நிறுவனத்துடன் இணையப்போகிறது என்பது இன்னும் முடிவெடுக்கப்படாத ஒன்று என்பதை எச்டிசியின் உயர் அதிகாரி ச்செர் வேங் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஆனால் நிச்சயம் சிறந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தயாரிக்கும் ஒரு முன்னனியில் உள்ள நிறுவனத்துயன் இணைவதாகப் பேச்சு அடிபடுகிறது. அந்த வகையில் பெய்டு ஓஎஸ்தான் உள்ளது. இந்த நிறுவனம் ஏலியன் ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் சந்தைக்கு வருகிறது. மொபைல்களை சிறந்த முறையில் தயாரிக்க வேண்டுமென்றால் நிச்சயம் அதன் ஆப்பிரேட்டிங் சிஸ்டம் சிறந்ததாக இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால்தான் வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தை வழங்க முடியும் என்பதையும் எச்டிசி நிறுவனத்தின் உயர் அதிகாரி ச்செர் வேங் கூறியுள்ளார். அந்த வகையில் எச்டிசி நிறுவனமும், சாம்சங் நிறுவனமும் சிறந்த ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தைப் பெறிவதற்குத் திட்டமிட்டுள்ளது. அதிலும் சாம்சங் நிறுவனம், கூகில் ஆன்ட்ராய்டு, வின்டோஸ் போன் 7, படா ஆப்பிரேட்டிங் சிஸ்டம் போன்ற சிறந்த அப்பிரேட்டிங் சிஸ்டத்தை வழங்குகின்ற நிறுவனத்துடன் முயற்சி செய்திருப்பது தெரியவருகிறது.
எச்டிசி மற்றும் சாம்சங் நிறுவனம் தற்சமயம் எச்ப்பி பாம் வெப் ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தை வாங்க இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இது பற்றி சம்மந்தப்பட்ட நிறுவனம் ஏதும் செய்தி வெளியிடவில்லை என்றாலும் இந்த ஆண்டுக்குள் தெரியவரும் என்று நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டு பார்சிலோன், ஸ்பெயின் போன்ற இடங்களிலும் வெளிவரும் போல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications