Home
Mobile

எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் எல்ஜி நெக்சுஸ் 4 - ஒரு ஒப்பீடு

By Karthikeyan
எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் எல்ஜி நெக்சுஸ் 4 - ஒரு ஒப்பீடு

ஸ்மார்ட்போன் சந்தையில் கூகுள் களமிறக்கி இருக்கும் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.1 இயங்கு தளம் தற்போது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. ஏறக்குறைய எல்லா மொபைல் நிறுவனங்களும் தங்களு பழைய போன்களில் இந்த ஜெல்லி பீன் அப்டேட்டேச் செய்து கொண்டிருக்கின்றன. அதே வேளையில் புதிய போனிகளையும் ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் களமிறக்குகின்றன.

இந்த நிலையில் எச்டிசி நிறுவனம் தனது ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கும் இந்த ஜெல்லி பீன் அப்டேட்டைச் செய்து வருகிறது. அதே நேரத்தில் கூகுளும் இந்த ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய தனது நெக்சுஸ் 4 போனை சமீபத்தில் களமிறக்கியது. இந்த இரண்டு போன்களுமே ஏறக்குறைய சம அளவிலான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருப்பதால் இந்த இரண்டு போன்களையும் சற்று ஒப்பிட்டு பார்த்தால் நன்றாக இருக்கும்.

எடையைப் பொருத்தவரை ஒன் எக்ஸ் 130 கிராமிலும், நெக்சுஸ் 139 கிராமிலும் வருகின்றன. ஒன் எக்ஸ் 4.7 இன்ச் அளவில் சூப்பர் எல்சிடி 2 கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் நெக்சுஸ் 4.7 இன்ச் அளவில் ஐபிஎஸ் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது.

ப்ராசஸரிலும் இந்த இரண்டு போன்களுக்கிடையே ஏராளமான வேறுபாடு உண்டு. அதாவது எக்ஸ் ஒன் 1.5 ஜிஹெர்ட்ஸ் என்விடியா டேக்ரா 3 சிப்செட்டை கொண்டிருப்பதால் இதன் பேட்டரி நீடித்த ஆயுளைப் பெறும். அதோடு இந்த போனில் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியும். மேலும் இந்த போனில் வீடியோ கேம்களையும் அற்புதமாக விளையாட முடியும்.

ஆனால் நெக்சுஸ் 4 போன் 1.5 ஜிஹெர்ட்ஸ் குவல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதில் வீடியோ கேம் விளையாடுவது புதுமையான அனுபவமாக இருக்கும். மேலும் இந்த ப்ராசஸர் 4ஜி எல்டிஇ வசதியையும் வழங்குகிறது.

இயங்கு தளத்தைப் பொருத்தவரை ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வந்த ஒன் எக்ஸ் தற்போது ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் அப்டேட்டை தற்போது பெற்று வருகிறது. ஆனால் நெக்சுஸ் போன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.2 இயங்கு தளத்தில் வருகிறது. ஜெல்லி பீன் 4.2 நெக்சுஸ் போனுக்கு பனோரமா ஷாட்டுகளுக்கான போட்டோ ஸ்பியர், செய்கை டைப்பிங், மிராகாஸ்ட் சப்போர்ட், டேட்ரீம் மற்றும் மேம்பட்ட தொழில் நுட்ப வசதிகளை வழங்குகிறது.

அதுபோல் ஒன் எக்ஸ் போனில் செய்யப்படும் ஜெல்லி பீன் 4.1 அப்டேட்டும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குகின்றது. அதாவது சென்ஸ் 4 தொழில் நுட்பம், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்தல், சோனி ப்ளே ஸ்டேசன் மொபைல் சான்றிதழ் மற்றும் 3டி அனிமேசன் போன்ற வசதிகளை இந்த அப்டேட் மூலம் ஒன்எக்ஸ் போன் பெறும்.

இரண்டு போன்களுமே பின்பக்கம் 8எம்பி கேமராவையும் முகப்பில் 1.3எம்பி கேமராவையும் கொண்டிருக்கின்றன. சேமிப்பை பொருத்தவரை ஒன்எக்ஸ் சற்று முன்னிலையில் இருக்கிறது. அதாவது இந்த போன் 16ஜிபி மற்றும் 32ஜிபி ஆகிய மாடல்களில் வருகிறது.

ஆனால் நெக்சுஸ் 8ஜிபி மற்றும் 16ஜிபி ஆகிய மாடல்களில் வருகிறது. ஆனால் ரேமைப் பொருத்தவரை நெக்சுஸ் 2ஜிபி ரேமைப் பெற்றும் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் ஒன்எக்ஸ் 1ஜிபி ரேமை மட்டுமே கொண்டுள்ளது. இரண்டு போன்களுமை மைக்ரோ எஸ்டி கார்டைக் கொண்டிருக்கவில்லை.

இணைப்பு வசதிகளைப் பொருத்தவரை இந்த இரண்டு போன்களுமே வைபை, ப்ளூடூத், என்எப்சி மற்றும் யுஎஸ்பி 2.0 ஆகிய வசதிகளுடன் வருகின்றன. விலையில் சற்று கணிசமான அளவில் வேறுபாடு உண்டு. அதாவது ஒன்எஸ் 16ஜிபி போன் ரூ. 32,210க்கும், 32ஜிபி போன் ரூ.34,999க்கும் விற்கப்படுகிறது. ஆனால் நெக்சுஸ் 8ஜிபி போன் ரூ,23,490க்கும் 16ஜிபி போன் ரூ.27,490க்கும் விற்கப்படுகிறது.

இரண்டு போன்களுமே ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வருவதால் ரசிகர்கள் இந்த இரண்டு போனிலும் ஜெல்லி பீன் வசதிகளை அபரிவிதமாக அனுபவிக்க முடியும். ஆனால் விலையைப் பொருத்தவரை நெக்சுஸ் கண்டிப்பாக ரசிகர்களின் பெரும்பான்மையான ஆதரவைத் பெரும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X