Home
Mobile

எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு!

எச்டிசி ஒன் எக்ஸ்+ மற்றும் எச்டிசி ஒன் எக்ஸ் என்ற இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு பற்றி பார்க்கலாம். ஒரு வகையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இரட்டையர்கள் என்று சொல்லலாம். ஏனெனில் ஒரே எச்டிசி குடும்பத்தில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒன் எக்ஸ்+ மற்றும் ஒன் எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய

ஒப்பீட்டினை இங்கே பார்க்கலாம்.

எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெளிப்பாடு தான் எச்டிசி ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போன் என்று கூறலாம். இதனால் இந்த ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட வசதி பற்றி கூறலாம்.

ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போன் 135 கிராம் எடை கொண்டதாகவும், எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் 130 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 4.7 இஞ்ச் சூப்பர் எல்சிடி-2 திரை தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்த முடியும். இதன் மூலம் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.

ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போன் குவாட் கோர் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் என்வீடியா டெக்ரா-3 ஏ-பி-37 பிராசஸரையும், ஒன் எக்ஸ் குவாட் கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் எனஅவீடியா டெக்ரா-3 சிப்செட் வசதியினையும் கொடுக்கும்.

ஒன் எக்ஸ்+ ஆன்ட்ராய்டின் லேட்டஸ்டு வெர்ஷனான 4.1 ஜெல்லி பீன் இயங்குதளத்தினை கொண்டதாக இருக்கும். அதே எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் இயங்குதளம் கொண்டதாக இருக்கும்.

கேமரா வசதியினை பொருத்தவரையில் இந்த ஸ்மார்ட்போன்களில் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும் சிறப்பாக பெற

முடியும். எச்டிசி ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போனில் 1.6 மெகா பிக்ஸல் கேமராவையும், ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 1.3 மெகா பிக்ஸல் கேமராவையும் சிறப்பாக பெற முடியும்.

கேமராவில் எந்தளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவு வாடிக்கையாளர்களின் கவனம் மெமரி வசதியிலும் இருக்கிறது. எச்டிசி ஒன் எக்ஸ்+ மற்றும் ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை தரும். எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் 32 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 1 ஜிபி ரேம் வசதியினை கொடுக்கும்.

வைபை, ப்ளூடூத் போன்ற தொழில் நுட்ப வசிதகளையும் இந்த ஸ்மார்ட்போன்கள் வழங்கும். 2,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி 6 மணி நேரம் டாக் டைமை எச்டிசி ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போனில் பெறலாம். எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் 1,800 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியில் 8 மணி நேரம் டாக் டைமை சிறப்பாக பயன்படுத்த

முடியும். இந்த ஸ்மார்ட்போன்களின் விலை விவரம் பற்றி கூடிய விரைவில் பெறலாம். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X