Home
Mobile

தொழில் நுட்பங்களில் ஒன்றுக்கொன்று சாவல் விடும் புதிய எச்டிசி போன்கள்

By Karthikeyan

புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்குவதில் எச்டிசி நிறுவனம் தற்போது அதிக அக்கறை காட்டி வருகிறது. அதன் மூலம் உலக மொபைல் சந்தையில் இந்த நிறுவனம் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஆகிய இயங்கு தளங்களில் இயங்கக்கூடிய ஸ்மார்ட்போன்களைக் களமிறக்கி இருக்கிறது.

அதாவது ஒன் எக்ஸ் + என்ற ஸ்மார்ட்போனை ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் களமிறக்கி இருக்கிறது. இந்த ஆன்ட்ராய்டு போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

அதோடு ஜே பட்டர்ப்ளை என்ற போனை ஜப்பானிலும், ட்ராய்டு டிஎன்எ என்ற போனை அமெரிக்காவிலும் களமிறக்கி இருக்கிறது. மேலும் எச்டிசி டீலக்ஸ் என்ற ஒரு புதிய போனைக் களமிறக்க காத்துக் கொண்டிருக்கிறது.

ஒன் எக்ஸ் + மற்றும் ட்ராய்டு டிஎன்எ ஆகிய போன்கள் இரண்டும் ஆன்ட்ராய்டு இயங்கு தளங்களில் இயங்குகின்றன. இந்த இரண்டு போன்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவற்றின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது ஒன் எக்ஸ் + போன் 135 கிராம் எடையுடனும், ட்ராய்டு டிஎன்எ போன் 138 கிராம் எடையுடனும் வருகிறது. டிஸ்ப்ளேயைப் பொறுத்தமட்டில் ஒன் எக்ஸ் + போன் 4.7 இன்ச் அளவில் சூப்பர் எல்சிடி 2 கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் வருகிறது. அதே நேரத்தில் ட்ராய்டு டிஎன்எ போன் 5 இன்ச் அளவில் உயர் டெபினிசன் கொண்ட சூப்பர் எல்சிடி 3 டிஸ்ப்ளேயுடன் வருகிறது.

இரண்டு போன்களுமே கார்னங் கொரில்லா கண்ணாடிகளைக் கொண்டுள்ளன. அதனால் இவற்றின் டிஸ்ப்ளேகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். ஒன் எக்ஸ் + குவாட் கோர் 1.7 ஜிஹெர்ட்ஸ் என்விடியா டேக்ரா 3 எபி37 ப்ராசஸரை கொண்டிருக்கிறது. இந்த ப்ராசஸர் பல வேலைகளைத் திறம்பட செய்யும் வலிமை கொண்டது. மேலும் இதில் உயர்தரமான எச்டி வீடியோ மற்றும் க்ராபிக்ஸ் போன்றவற்றை அனுபவிக்கலாம்.

அதே நேரத்தில் ட்ராய்டு டிஎன்எ 1.5 ஜிஹெர்ட்ஸ் சினாப்ட்ராகன் எஸ்4 குவாட் கோர் ப்ராசருடன் வருகிறது. இந்த ப்ராசஸர் பேட்டரிக்கு நீடித்த உழைப்பையும் அதே நேரத்தில் விரைவான ப்ரவுசிங் அனுபவத்தையும் வழங்கும்.

இந்த இரண்டு போன்களுமே ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வருகின்றன. அதனால் இந்த இரண்டும் ஏராளமான அப்ளிகேசன்களைக் கொண்டிருப்பதோடு மிக வேகமாகவும் இயங்கும் என்று நம்பலாம்.

கேமராவைப் பொறுத்தவரை இந்த இரண்டு போன்களுமே ஆட்டோ போக்கஸ், எல்இடி ப்ளாஷ் மற்றும் பிஎஸ்ஐ சென்சாருடன் கூடிய 8எம்பி கேமராவை பின்புறத்தில் கொண்டுள்ளன. ஆனால் முகப்புக் கேமராவைப் பொறுத்தவரை ஒன் எக்ஸ் + 1.6எம்பி கேமராவையும், டிஎன்எ 2.1எம்பி கேமராவையும் கொண்டுள்ளன.

ஒன் எக்ஸ் + போன் 1ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு ஆகியவற்றுடன் வருகிறது. ஆனால் டிஎன்எ போன் 2ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி சேமிப்புடன் வருகிறது. இரண்டு போன்களிலுமே எஸ்டி கார்டு வசதி இல்லை.

இணைப்பு வசதிகளைப் பொருத்தமட்டில் இரண்டு போன்களுமே மைக்ரோ யுஎஸ்பி, வைபை, 4ஜி எல்டிஇ மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இந்த இரண்டு போன்களுமே நீடித்த உழைப்பு கொண்ட சூப்பரான பேட்டரிகளைக் கொண்டுள்ளன.

விலையைப் பொறுத்தமட்டில் ஒன் எக்ஸ் + ரூ.40,190க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் டிஎன்எ 119 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.11,000க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு போன்களுமே பீட்ஸ் ஆடியோ வசதியுடன் வருவதால் இவற்றில் இசை கேட்பதும் பிரமாதமாக இருக்கும்.

வேகமான ப்ராசஸர், அதிக சேமிப்பு மற்றும் இயங்கு திறன் ஆகிவற்றின்படி பார்த்தால் ஒன் எக்ஸ் + போன் சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் முகப்பு கேமரா போன்றவற்றைப் பொருத்துப் பார்த்தால் டிஎன்எ போன் சிறப்பானதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X