தீபாவளிக்கு புதுவரவாக எச்டிசி ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போன்!

Posted By:

HTC One X+ smartphone to Hit Indian Stores this Diwali

ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போனை வருகிற தீபாவளிக்கு அறிமுகம் செய்யவிருக்கிறது எச்டிசி நிறுவனம். இந்த எச்டிசி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் தீபாவளி பண்டிகைக்கு நமது நாட்டில் அறிமுகம் செய்யப்படுகிறது என்பது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தகவலாக இருக்கும்.

இந்த எச்டிசி ஒன் எக்ஸ்+ என்ற இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான எச்டிசி ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த ஸ்மார்ட்போன் 135 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 4.7 இஞ்ச் தொடுதிரை வசதியின் மூலம் சிறப்பான தொடுதொடுதிரை வசதியினை எளிதாக பெற முடியும். அகன்ற தொடுதிரை வசதியினை கொடுப்பதோடு எல்சிடி-2 திரை தொழில் நுட்பத்தின் மூலம் தகவல்களை தெளிவாக பெறவும் முடியும்.

இந்த திரையின் மூலம் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம். இதில் குவாட் கோர் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் என்வீடியா டெக்ரா-3 ஏபி-37 பிராசஸரையும் பெற முடியும்.

ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சி்ஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4.1 ஜெல்லி பீன் வெர்ஷன் கொண்ட இயங்குதத்தினையும் பெறலாம். ஸ்மார்ட்போனை பொருத்தவரையில் இயங்குதளம் மட்டும் அல்லாமல், கேமராவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவினை சிறப்பாக பெற முடியும். அழகான புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் வசதி ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பாக பெறலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் 1 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியினையும் எளிதாக பயன்படுத்தி கொள்ள முடியும். இதனால் அதிக தகவல்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம் இந்த ஸ்மார்ட்போனில் இன்னும் ஒரு சிறப்பான வசதி என்னவென்றால் இதன் என்எப்சி தொழில் நுட்ப வசதி என்று கூறலாம்.

இதில் எளிதாக பணபரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். இதன் மூலம் 4ஜி நெட்வொர்க் தொழில் நுட்ப வசதிகளை சிறப்பாக பெற முடியும். அதிக வசதிகளை வழங்கும் 4ஜி நெட்வொர்க் போன்ற தொழில் நுட்ப வசதிகளுக்கு 2,100 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி சிறப்பாக ஒத்துழைக்கும். 6 மணி நேரம் டாக் டைமிற்கு இந்த ஸ்மார்ட்போன் எளிதாக சப்போர்ட் செய்யும். எச்டிசி ஒன் எக்ஸ்+ என்ற இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விவரங்களை கூடிய விரைவில் பெறலாம். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot