Home
Mobile

ஸ்பெஷல் பேக்கேஜில் பட்டையை கிளப்பும் எச்டிசி ஸ்மார்ட்போன்!

By Super

ஸ்பெஷல் பேக்கேஜில் பட்டையை கிளப்பும் எச்டிசி ஸ்மார்ட்போன்!
ஒரு புதிய பேக்கேஜை வழங்க இருக்கிறது எச்டிசி நிறுவனம். பீட் சோலோ பேக்கேஜ் ஹெட்போனை, ஒன் எக்ஸ் டிலெக்ஸ்ஸ்மார்ட்போனுடன் வழங்க உள்ளது எச்டிசி நிறுவனம். துல்லியமான ஒலி திறனை கொடுப்பதற்காகவே, பிரத்தியேகமாக இந்த பீட் சோலோ ஹெட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் என்விஐடிஐஏ டெக்ரா-3 குவாட் கோர் பிராசஸர் 1.5 ஹிகாஹெர்ட்ஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். அது மட்டும் அல்லாது நவீன முறையில் கொடுக்கப்படும் அனைத்து தகவல்களும் 4.7 இஞ்ச் திரையின் மூலம் தெளிவாக காண முடியும்.

டியூவல் கேமராவினை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. முதலில் இந்த ஸ்பெஷல் பேக்கேஜ் கொண்ட எச்டிசி ஒன் எக்ஸ் டிலெக்ஸ் ஸ்மார்ட்போன் தய்வானில் மார்ச் 20-ஆம் தேதியில் இருந்து கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எச்டிசி ஒன் எக்ஸ் டிலெக்ஸ் மற்றும் பீட் சோலோ ஹெட்போன் இரண்டையும் சேர்த்து ஸ்பெஷல் பேக்கேஜ்ஜில் வாங்கினால் ரூ.42,000 விலை கொண்டதாக இருக்கும். இதே தனித் தனியாக என்றால் எச்டிசி ஒன் எக்ஸ் டிலெக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.39,000 விலையிலும், பீட் சோலோ ஹெட்போன் ரூ.9,000 விலையிலும் கிடைக்கும். ஆனால் இங்கு கூறப்பட்டுள்ள ஸ்பெஷல் பேக்கேஜ்ஜில் வாங்கினால் கிட்டத்தட்ட ரூ.6,000 மீதமாகிறது.

உண்மையில் இது ஒரு சிறப்பான பேக்கேஜ் என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகுமா என்பது பற்றிய தகவல்களும் கூடிய விரைவில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X