'பளிச்' தொடுதிரையோடு இந்தியாவில் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்!

இது எச்டிசி வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிமையான செய்தி தான். கடந்த மொபைல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் புதுமையான தொழில் நுட்ப வசதிகளுடன் இந்த மாதம் ஏப்ரலில் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைக்க இருக்கிறது.
8.9 எம்எம் தடிமன் கொண்ட எச்டிசி ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்டதாக இருக்கிறது. இதனால் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும். ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தை கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் தறம் நிச்சயம் அனைவரும் பாராட்டும் வகையில் இருக்கும்.
32 ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் வசதியை கொடுக்கும். சிறப்பான துல்லியத்துடன் ஆடியோவை வழங்க இதில் பீட்ஸ் ஆடியோ தொழில் நுட்பமும் உள்ளது.
எச்டிசி இமேஜ் சிப் தொழில் நுட்பம் கொண்ட இதன் கேமராவின் மூலம் அழகான புகைப்படத்தினை மிக துல்லியத்துடன் பெறலாம். இதன் மூலம் ஒரு நொடிக்கு 4 டிஜிட்டல் ஃபோட்டோக்களை பெற முடியும். இந்த 8 மெகா பிக்ஸல் கேமரா லெட் ஃபிளாஷ் வசதி கொண்டது. 1080பி துல்லியத்தில் இதில் வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் பெறலாம்.
இதன் 1,800 எம்ஏஎச் பேட்டரி வசதி நீண்ட நேரம் உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். சிறந்த தொழில் நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.30,000 விலையில் பெறலாம்.


Click it and Unblock the Notifications