சிறந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்ய இங்கே ஓர் சிறிய ஒப்பீடு!

Posted By: Staff
சிறந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்ய இங்கே ஓர் சிறிய ஒப்பீடு!
இன்று மொபைல் மார்கெட்டிற்கு வரும் எல்லா ஸ்மார்ட்போன்களிலுமே சிறந்த தொழில் நுட்பங்கள் தான் இருக்கின்றன. இதில் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது என்பதை தேர்வு செய்வது கொஞ்சம் சிரமம் தான். அதனால் இங்கே இரண்டு சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போனின் ஒப்பீட்டை பார்ப்போம்.

எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் ஹுவெய் அசன்டு பி-1 ஸ்மார்ட்போன் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்ப விவரங்களை பார்ப்போம்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சிறப்பான தொழில் நுட்பங்களுக்கு சப்போர்ட் செய்யும் என்று தாராளமாக கூறலாம்.

எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் ஹுவெய் அசன்டு பி-1 என்ற இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு வி 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் இயங்கும்.

ஹுவெய் அசன்டு பி-1 ஸ்மார்ட்போன் 4.3 அகன்ற திரையை கொண்டிருந்தாலும், எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் இன்னும் ஒரு படி அதிகமாக சென்று 4.7 இஞ்ச் பெரிய திரையினை வழங்கும்.

எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸரை கொண்டுள்ளதால், அதி வேகத்தில் செயல்படும். ஹுவெய் அசன்டு பி-1, ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கார்டெக்ஸ் ஏ-9 டியூவல் கோர் சிறப்பான பிராசஸரை கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் கேமரா அதிக முக்கியத்தும் பெறுகிறது. கேமராவினை பொருத்த வரையில் எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் ஹுவெய் அசன்டு பி-1 ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியான கேமரா வசதியினை கொண்டுள்ளது. இந்த

2 ஸ்மார்ட்போன்களுமே 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 முகப்பு கேமராவினையும் வழங்கும். இதன் மூலம் சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றினை பெற முடியும். எச்டிசி ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை பயன்படுத்தலாம்.

ஹுவெய் அசன்டு பி-1 ஸ்மார்ட்போனில் 1 ஜிபி ரேம், 4ஜிபி ரோம் வசதியினை பெறலாம். இதில் 32 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன்களில் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினை பயன்படுத்த சிறப்பான பேட்டரி வசதி உள்ளது.

எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஹுவெய் அசன்டு பி-1 ஸ்மார்ட்போன் ஸ்டான்டர்டு எல்-அயான் 1,670 எம்ஏஎச் பேட்டரியினை கொண்டது. இந்த இரண்டு ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்களும் கொஞ்சம் வித்தியாசப்பட்டாலும், இந்த ஸமார்ட்போன்களின் மூலம் சிறந்த தொழில் நுட்பத்தினை நிச்சயம் பெற முடியும் என்று கூறலாம்.

எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.38,000 விலை கொண்டது. ஹுவெய் அசன்டு பி-1 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்