Home
Mobile

கண்கொள்ளா காட்சி தரப்போகும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்!

கண்கொள்ளா காட்சி தரப்போகும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்!

இந்த மாதம் உலக மொபைல்போன் கண்காட்சியில் எச்டிசி நிறுவனத்தின் சில மொபைல் படைப்புகள் அறிமுகமாக உள்ளது. இதில் எச்டிசி ஒன் வி மற்றும் எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன்ளும் இடம் பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்கிரீம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போனில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் கியூவல்காம் பிராசஸரும், எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் டெக்ரா 3 பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

திரை வசதியை பொருத்த வரையில் எச்டிசி எக்ஸ் ஸ்மார்ட்போன் சற்று அகன்ற திரையை கொண்டுள்ளது. எச்டிசி எக்ஸ் ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் திரையையும், எச்டிசி வி ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் திரையையும் வழங்கும். இந்த திரையின் மூலம் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சிறந்த திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும்.

எச்டிசி வி ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், எச்டிசி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமரா மட்டும் அல்லாது 1.3 மெகா பிக்ஸல் செகன்டரி கேமராவினையும் வழங்கும். எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் 8ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொண்டது. எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 32ஜிபி வரை மெமரி வசதி உள்ளதாக தகவல்களில் வெளியாகி உள்ளது.

இத்தகைய வசதிகளை கொண்டிருக்கும் இந்த எச்டிசி ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் நீடித்து உழைக்கும் பேட்டரி இருக்கும் என்று தாராளமாக நம்பலாம். எச்டிசி ஒன் வி மற்றும் எச்டிசி வி ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அதிக விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் கண்காட்சி நடக்கும் வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X