ஜெல்லி பீன் இயங்குதளத்துடன் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்!

சமீபத்தில் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை தனது ஸ்மார்ட்போன்களில் வழங்கி வந்த எச்டிசி நிறுவனம், புதிதாக அறிமுகமாகியுள்ள ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் ஒன் எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களில் அப்டேட் செய்கிறது.
தனது எச்டிசி ஒன் எக்ஸ், எச்டிசி ஒன் எக்ஸ்எல் மற்றும் எச்டிசி ஒன் எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களில் வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறது எச்டிசி நிறுவனம். இதற்கு முன்பு இந்த ஸ்மார்ட்போன்களில் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கப்பட்டது.
அதற்குள் வெகு சீக்கிரத்திலேயே ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அப்கிரேட் செய்கிறது எச்டிசி நிறுவனம். இங்கு கூறப்பட்டுள்ள மூன்று ஸ்மார்ட்போன்களிலும், 8 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்ப்டடுள்ளது. அது மட்டும் அல்லாது இந்த ஸ்மார்ட்போன்களில் விஜிஏ முக்பபு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்குதள அப்கிரேட் வசதியை செய்துவிட்டால், இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் கூடுதல் தொழில் நுட்பங்களையும் வழங்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications