ஒன் சிரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் களமிறக்கும் எச்டிசி!

Posted By: Staff
ஒன் சிரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் களமிறக்கும் எச்டிசி!
மக்களின் மத்தியில் சிறப்பான பெயரை தக்க வைத்திருக்கும் எச்டிசி நிறுவனம் ஒன் சிரீஸ் மொபைல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இது எச்டிசி வாடிக்கையாளர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியாக தான் இருக்கும்.

அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் எச்டிசி நிறுவனத்தின் எச்டிசி ஒன் எக்ஸ், எச்டிசி ஒன் வி மற்றும் ஒன் எஸ் என்ற ஒன் சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் என்ன விலையில் கிடைக்கும் என்பதற்கும் முன்பு இதில் உள்ள தொழில் நுட்ப விவரங்களையும் சற்று பார்ப்போம்.

இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸர் மூலம் சிறப்பாக இயங்கும் தன்மை கொண்டது. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் என்விஐடிஐஏ டெக்ரா-3 குவாட் கோர் மொபைல் பிராசஸர் வசதியையும் கொண்டது.

4.7 இஞ்ச் அகன்ற திரையில் அசத்தும் இந்த ஸ்மார்ட்போன் நீடித்து உழைக்கும் பேட்டரி வசதி கொண்டது.  எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தினை வழங்கும் 3.7 இஞ்ச் டபிள்யூவிஜிஏ திரையினையும் வழங்கும்.

தகவல்களை தெளிவாக பார்க்க உதவும் வகையில் சிறப்பான திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினால் அழகான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும்

கொடுக்கும்.

எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிங்கிள் கோர் பிராசஸர் வசதியினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெற முடியும். இதில் 25ஜிபி வரை ட்ராப்பாக்ஸ் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது.

அதோடு இதில் 4ஜிபி வரை இன்பில்ட் ஸ்டோரேஜ் வசதியினையும் பெற முடியும். அற்புதமான 4.3 இஞ்ச் திரையின் மூலம் சூப்பர் அமோல்டு தொழில் நுட்பத்தினை வழங்கும். இதன் திரையின் மூலம் 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் விஜிஏ முகப்பு கேமராவும் உள்ளது.

இப்படி அனைத்து வகையிலும் சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் எச்டிசி ஒன் சிரீஸ் ஸ்மார்ட்போன்களை ரூ.20,000 விலையில் இருந்து ரூ.45,000 விலை வரை கொண்டதாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்