விற்பனையில் கலக்கும் எச்.டி.சி ஒன் மேக்ஸ்...!

Written By:

மொபைல் போன் உலகில் தனக்கென தனி வாடிக்கையாளரை கொண்டுள்ள நிறுவனம் எது என்றால் அது எச்.டி.சி தான்.

எச்.டி.சி. நிறுவனம், தன் மொபைல் போன்களிலேயே, மிக அதிக விலையிடப்பட்ட மொபைல் போனை, இந்தியச் சந்தையில், அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 61,490. இது எச்.டி.சி. ஒன் மேக்ஸ் என அழைக்கப்படுகிறது. ஆனால், சந்தையில் இது ரூ.56,490க்குக் கிடைக்கலாம்.

இருப்பதிலேயே மிகப் பெரிய திரையாக 5.9 அங்குல திரை இதில் உள்ளது. இதுவரை 4.7 அங்குல அகலத் திரையினையே எச்.டி.சி. தந்து வந்தது.

ஸ்டைலஸ் பேனா, திருட்டுக்கு எதிரான இன்ஸூரன்ஸ், நீர் மற்றும் பிற திரவத்தினால் கெட்டுப்போனால் இழப்பீடு மற்றும் மாதத் தவணையில் பெறுதல் எனப் பல சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்படுகின்றன.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

விற்பனையில் கலக்கும் எச்.டி.சி ஒன் மேக்ஸ்...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

தவணைக் கடனுக்கான ப்ராசசிங் கட்டணம் எதுவுமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறக் கேமராவின் கீழாக ஸ்கேனர் ஒன்று தரப்பட்டுள்ளது. விரல் ரேகையினை இது உணர்ந்து, இந்த போனின் உரிமையாளர் மட்டுமே பயன்படுத்த இது வழி வகை செய்கிறது.

இதன் இரு மாடல்கள் 16 மற்றும் 32 ஜிபி மெமரியுடன் உள்ளன. இந்த போனைப் பயன்படுத்துபவர்கள், கூகுள் ட்ரைவில் 50 ஜிபி மெமரி இடத்தினை இலவசமாகப் பெறலாம்.

இதில் இணைத்து தரப்படும் பேட்டரி 3,300 mAh திறன் கொண்டதாக உள்ளது. வழக்கமாக, 4 அங்குல திரை கொண்ட போன்களில், 1,800 முதல் 2,000 mAh திறன் கொண்ட பேட்டரிகள் இணைக்கப்படும்.

இதன் திரை 5.9 அங்குல அகலத்தில் அமைக்கப்படுவதால், கூடுதல் திறனுடன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்