அடுத்த ஸ்மார்ட்போனுக்கு ஆயத்தமாகும் எச்டிசி!

By Super
|

அடுத்த ஸ்மார்ட்போனுக்கு ஆயத்தமாகும் எச்டிசி!
வாடிக்கையாளர்களின் கவனத்தை தனது பக்கம் திருப்பி வருகிறது எச்டிசி நிறுவனம் என்று கூறலாம். எச்டிசி ஒன் வரிசையில் சிறந்த ஸ்மார்ட்போன்களையும், புதிய அப்டேஷன்களையும வழங்கி வந்த எச்டிசி நிறுவனம், ஒன் எக்ஸ் + என்ற புதிய ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்ப விவரங்கள் வலைத்தளங்களில் கசிந்துள்ளது. அதிலும் இந்த ஸ்மார்ட்போனின் புதிய தொழில் நுட்ப விவரங்கள் டிவீட் செய்யப்பட்டுள்ளது.

1.6 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரை இந்த ஸ்மார்ட்போன் மிக சிறப்பாக வழங்கும். 129 கிராம் எடை கொண்டதாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டதாகவும் இருக்கும்.

அதோடு இந்த புதிய எச்டிசி படைப்பான ஒன் எக்ஸ் + ஸ்மார்ட்போன், 32 ஜிபி ரோம், 1 ஜிபி ரேம் போன்ற தொழில் நுட்ப வசதிகளையும் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பது போன்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.

கசிந்துள்ள தகவலின்படி பார்த்தால், இது ஸ்மார்ட்போன் என்று தான் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது 7 இஞ்ச் திரை வசதியினை வழங்கும் என்று கூறப்படுவதால், இது ஃபேப்லட்டாக கூட இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த 7 இஞ்ச் திரையின் மூலம் 1280 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம்.

இதில் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும். இப்படி இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில தகவல்கள் மட்டும் வெளியில் கசிந்துள்ளது. இதோடு 10 இஞ்ச் திரை வசதி கொண்ட டேப்லட்டும் அறிமுகம் செய்யப்படும் என்பது போன்றும், அந்த புதிய டேப்லட் டெக்ரா-3 பிராசஸர் வசதியினையும் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எச்டிசி நிறுவனத்தின் ஒன் எக்ஸ் ப்ளஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் பற்றிய முழு தகவலையும், இன்னும் கூடிய விரைவில் பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X