Home
Mobile

37 சதவிகிதம் அதிக டாக் டைமுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்!

எச்டிசி ஒன் வரிசை ஸ்மார்ட்போன் சமீபமாகவே அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன் எக்ஸ்+ என்ற இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பம் மற்றும் விலை பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விவரங்களை பார்க்கும் முன்பு இதன்

தொழில் நுட்ப சங்கதிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எச்டிசி ஒன் எக்ஸ்+ என்ற ஸ்மார்ட்போன் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் என்வீடியா டெக்ரா-3 ஏபி-37 பிராசஸர் கொண்டதாக இருக்கும். இதனால் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினை பெறலாம். இதில் 4.7 இஞ்ச் திரை வசதியினையும்

எளிதாக பெற முடியும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஜெல்லி பீன் இயங்குதளத்தின் புதிய சிறப்பான வசதிகளை பெற முடியும்.

அதோடு இந்த ஸ்மார்ட்போனில் இன்னும் முக்கிய வசதியும் அளிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 37 சதவிகிதம் அதிக டாக் டைமினை பயன்படுத்த முடியும். இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1.6 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

பொழுதுபோக்கு அமசமாக இந்த ஸ்மார்ட்போனில் ஆடியோ வசதியினை சிறப்பாக பெற முடியும். இறைச்சல் இல்லாமல், துல்லியமான இசையை இனிமையாக கேட்டு மகிழலாம். ஸ்பீக்கருடன் இந்த ஸ்மார்ட்போனை சுலபமாக இணைக்க முடியும். என்எப்சி வசதி கொண்ட ப்ளூடூத் ஸ்பீக்கர் வசதியினையும் இந்த ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போனில் பெறலாம். எச்டிசி நிறுவனத்தின் இந்த ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போனை ரூ. 40,190 விலையில் பெறலாம்.

எச்டிசி ஒன் வரிசை ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் அதிக பிரசித்தம் பெற்றதாக இருக்கிறது. அந்த வகையில் எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்களையும் நமது கோப்ரோபோ வலைத்தளத்தில் எளிதாக இங்கே பெற முடியம்.

எச்டிசி ஒன் எக்ஸ்+:

பிராசஸர் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் என்வீடியா டெக்ரா-3 ஏபி-37 பிராசஸர்

4.7 இஞ்ச் திரை வசதி

ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்

64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி

8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1.6 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா

2,100 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X