புதிய ஒன் வரிசை ஸ்மார்ட்போனை வெளியிடும் எச்டிசி!

ஜூன் 8-ஆம் தேதியில் இருந்து இந்த எச்டிசி ஒன் எஸ் ஸ்மார்ட்போனை பெறலாம். இந்த ஸ்மார்ட்போனை இந்திய மொபைல் சந்தைகளிலும் வெளியாகும். இதன் விலை பற்றிய தகவல்களும் வெளியாகி
உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விலையை பற்றி பார்ப்பதற்கும் முன்பு இதன் தொழில் நுட்ப விவரத்தினை பார்க்கலாம். அப்போது தான் இந்த ஸ்மார்ட்போனுக்கு இதன் விலை சரியானதா என்பதையும் யூகிக்க முடியும்.
ஒன் எஸ் ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனை 8 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளதை போல இந்த ஒன் எஸ் ஸ்மார்ட்போனும் லெட் ப்ளாஷ் வசதியுடன் 8 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும்.
4.3 இஞ்ச் சூப்பர் அமோலெட் தொடுதிரை வசதினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் திரையின் மூலம் தகவல்களையும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தெளிவாக பார்க்கலாம். இதில் இன்னும் சொல்லப்போனால் விஜிஏ முகப்பு கேமரா வசதியினையும் வழங்கும்.
16 ஜிபி வரை இன்டர்னல் வசதி, புளூடூத், வைபை என்று சகல விதமான தொழில் நுட்ப வசதிகளுக்கும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக துணை புரியும். இந்த எச்டிசி ஒன் எஸ் ஸ்மார்ட்போனை ரூ.33,000 விலையில் பெறலாம்.


Click it and Unblock the Notifications