முழு எச்டி டிஸ்ப்ளேயுடன் வரும் எச்டியின் முதல் போன்

By Karthikeyan
|
முழு எச்டி டிஸ்ப்ளேயுடன் வரும் எச்டியின் முதல் போன்

இவ்வளவு நாள்களாக வதந்தி கிளப்பப்பட்டு வந்த தனது ஜே பட்டர்பிளை ஸ்மார்ட்போனை இன்று ஜப்பானில் அதிகார்ப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறது எச்டிசி நிறுவனம்.

இந்த போனின் முக்கிய விஷேசம் என்னவென்றால் எச்டிசி அறிமுகம் செய்யும் முழு எச்டி டிஸ்ப்ளே முதல் கொண்ட ஸ்மார்ட்போனாகும். இந்த போன் 5 இன்ச் அளவில் சூப்பர் எல்சிடி 3 டிஸ்ப்ளேயுடன் அட்டகாசமாக இருக்கிறது.

இந்த ஜே பட்டர்பிளை போன் வரும் டிசம்பரில் ஜப்பானில் விற்பனைக்கு வரும் என்று எச்டிசி அறிவித்திருக்கிறது. மேலும் இந்த போனில் 1.5 ஜிஹெர்ட்ஸ் க்வல்காம் எஸ்4 ப்ரோ க்வாட் கோர் ப்ராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு ஆகிய வசதிகள் உள்ளன.

இந்த போனில் உள்ள கேமராக்களும் அட்டகாசமாக உள்ளன. அதாவது இந்த போனில் 8எம்பி பின்பக்க கேமரா மற்றும் 2எம்பி முகப்புக் கேமரா போன்றவை உள்ளன. இந்த போன் ஆன்ட்ராய்டு 4.1 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருகிறது.

இணைப்பு வசதிகளைப் பொருத்தவரை இந்த போனில் எச்டிஎம்ஐ அவுட், மைக்ரோ யுஎஸ்பி, இன்ப்ரேர்டு, வைபை, ப்ளூடூத் மற்றும் என்எப்சி போன்ற வசதிகள் உள்ளன.

இந்த புதிய ஜே பட்டர்பிளை போன் எச்டிசி நிறுவனத்திற்கு பெரிய வெற்றியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X