முதல் டியூவல் சிம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் எச்டிசி!

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் கொண்டது. இதன் பிராசஸர் சிறந்த வகையில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் பிராசஸர் வசதியினை கொண்டது.
114 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். இந்த திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும்.
இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா சிறப்பான துல்லியத்தினை கொண்ட புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் இதில் பெறலாம். 4ஜிபி மெமரி வசதிக்கு இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் எளிதாக சப்போர்ட் செய்கிறது.
இதன் வைபை வசதியினால் இன்டர்நெட் பயன்பாடுகளையும் பெறலாம்.
சிறந்த ஸ்மார்ட்போனை பெற நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த டிசையர் வி ஸ்மார்ட்போன் சரியானதாக இருக்கும் என்று கூறலாம்.
இந்த ஸ்மார்ட்போனில் டியூவல் சிம் தொழில் நுட்ப வசதியினை பயன்படுத்தலாம் என்பது இன்னும் ஒரு சிறந்த வாய்ப்பு. ஐரோப்பாவில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், அடுத்த மாதம் ஆசியா நாடுகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications