மொபைல் மார்கெட்டில் ஹிட் கொடுக்கும் எச்டிசி ஜெட் ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
மொபைல் மார்கெட்டில் ஹிட் கொடுக்கும் எச்டிசி ஜெட் ஸ்மார்ட்போன்!
உயர்ந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் நிறுவனம் என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் பெயர் பெற்ற எச்டிசி நிறுவனம் ஜெட் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் நிறைய ஸ்மார்ட்போன்களுக்கு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வசதியை வழங்கி உள்ளது எச்டிசி நிறுவனம். அப்படி இருக்கையில் இந்த புதிய ஸ்மார்ட்போனில் மட்டும் ஐஸ் கிரீம் சான்ட்விச் வசதி இல்லாமல் போகுமா? இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் இயங்கும்.

வாடிக்கையாளர்களின் கண்களை அகலமாக விரிய வைக்கும் அளவிற்கு 4.7 அகன்ற திரை வசதியை கொடுக்கும். இந்த அற்புதமான திரையை பாதுகாப்பாக வைத்து கொள்ள இதில் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கவசமும் உள்ளது.

சிபியூ கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம்8960 பிராசஸரும் பொருத்துப்பட்டுள்ளது. கியூவல்காம் அட்ரினோ 225 கிராஃபிக்ஸ் பிராசஸரும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. அனைவரையும் அசர வைக்கும் விதத்தில் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும் இதில் பயன்படுத்தி சிறந்த புகைபடத்தினை பெறலாம். 1920 X 1080 பிக்ஸல் துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்கும்.

ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி எளிதாக பிரவுசிங் வசதியினை பெறலாம். 3ஜி நெட்வொர்க் வசதியினை உபயோகப்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமான ஒன்றாக இருக்கும்.

இதில் சிடிஎம்ஏ வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனில், நிறைய கேம்கள் ப்ரீலோடடு செய்யப்பட்டுள்ளது. 1,200 சிடிஎம்ஏஎச் பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிறந்த தொழில் நுட்பத்திற்கு சிறப்பாக துணை புரியும்.

இதன் விலை விவரங்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்