Home
Mobile

ஐசிஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்!

By Super

ஐசிஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்!
சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுத்து கொண்டு வரும் எச்டிசி நிறுவனம், ஜே (ஐஎஸ்டபிள்யூ13எச்டி) என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதால் சிறப்பாக இயங்க துணை புரியும்.

எத்தகைய தகவல்களாக இருப்பினும், புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் போன்றவற்றையும் இந்த ஸ்மார்ட்போனில் தெளிவாக பார்க்க இதன் 4.3 இஞ்ச் அகன்ற திரையின் மூலம் பெற முடியும்.

டியூவல் கேமரா வசதியினையும் இந்த எச்டிசி ஜே ஸ்மார்ட்போனில் பெறலாம். இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டதால் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பயன்படுத்தலாம்.

16 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனில், 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். இதன் நீடித்து உழைக்கும் பேட்டரி உயர்ந்த தொழில் நுட்ப வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும்.

இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் உள்ளதால் நிறைய ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களை பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போன் ஜப்பான் மொபைல் மார்கெட்டில் மட்டுமே அறிமுகமாகும் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. இதன் விலையும் இன்னும் வெளியாகவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X