Home
Mobile

எச்டிசியின் புதிய படைப்பாக டிசையர் சி ஸ்மார்ட்போன்!

By Super

எச்டிசியின் புதிய படைப்பாக டிசையர் சி ஸ்மார்ட்போன்!
ஒன் எக்ஸ், ஒன் வி, எச்டிசி எஸ் என்ற புதிய புதிய ஸ்மார்ட்போன்களை வழங்கிய எச்டிசி நிறுவனம் இப்போது புதிதாக டிசையர் சி என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 3.5 இஞ்ச் திரை வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.

இந்த டிசையர் சி ஸ்மார்ட்போனில் சிறப்பான ஆடியோ தொழில் நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. உறுதியான படைப்பாக இந்த ஸ்மார்ட்போன் இருந்தாலும், பேட்டரியுடன் சேர்த்து 98 கிராம் எடையை கொண்டுள்ளது.

இதில் 3.5 இஞ்ச் திரை வசதியினை கொண்டதால் தகவல்களை சிறப்பாகவும், தெளிவாகவும் கொடுக்கும். இதன் 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் துல்லியமான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் எளிதாக பெற முடியும்.

4 ஜிபி வரை மெமரி வசதியினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். இன்னும் இந்த ஸ்மார்ட்போனை பற்றி கூற வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் எச்டிசி ஒன் எக்ஸ், எச்டிசி ஒன் வி, ஒன் எஸ் போல இதில் 25 ஜிபி வரை ட்ராப்பாக்ஸ் வசதியினை ஃப்ரீயாக பயன்படுத்தலாம்.

கறுப்பு, சிகப்பு, வெள்ளை என்று கலக்கும் இந்த ஸ்மார்ட்போன் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த எச்டிசி டிசையர் சி ஸ்மார்ட்போன் ஆன்லைனில் ரூ. 14,299 விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X