ஆன்ட்ராய்டு அப்கிரேடுடன் வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்

இன்கிரெடிபில் எஸ் என்ற ஸ்மார்ட்போனில் புதிய ஆன்ட்ராய்டு அப்கிரேடு வசதி வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்கிரெடிபில் ஸ்மார்ட்போனில் தற்போது உள்ள ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு பதிலாக புதிய ஆன்ட்ராய்டு 2.3.5 வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டதாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனின் மூலம் நிறைய புதிய தொழில் நுட்ப வசதிகளை எளிதாக பெறலாம். எச்டிசி நிறுவனத்தின் மூலம் எந்த மொபைல்கள் வந்தாலும் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது.
உயர்ந்த தொழில் நுட்பத்தினை தான் வாடிக்கையாளர்களும் எதிர் பார்க்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் விதமாக புதிய ஆன்ட்ராய்டு அப்கிரேடுடன் எச்டிசி இன்கிரெடிபில் எஸ் ஸ்மார்ட்போன் வர இருப்பதாக தெரிகிறது.
ஆனால், அதுபற்றிய கூடுதல் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இநத் புதிய அப்கிரேடு ஸ்மார்ட்போனை ஐரோப்பிய சந்தையில் முதலில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications