Home
Mobile

சர்வதேச சந்தையில் சாகசம் புரிய காத்திருக்கும் எச்டிசி ஸ்மார்ட்போன்!

By Super

சர்வதேச சந்தையில் சாகசம் புரிய காத்திருக்கும் எச்டிசி ஸ்மார்ட்போன்!
எலக்ட்ரானிக் சாதனங்களில் நவீன வசதிகளை கொடுத்து சிறப்பான இடத்தை தக்க வைத்து இருக்கிறது எச்டிசி நிறுவனம். கோல்ஃப் என்ற புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டதாக இருக்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் திரையும் தகவல்களை முழுதாக பார்க்க உதவும் வகையில் 3.5 இஞ்ச் அகன்ற திரை வசதியை வழங்கும். 480 x 800 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போனின் திரையின் மூலம் பெறலாம்.

இதன் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் அதி வேகத்தில் செயல்பட துணை புரியும். 4ஜிபி வரை மெமரி கெப்பாசிட்டியை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடு்த்தி கொள்ளவும் முடியும். இந்த ஸ்மார்ட்போன் பற்றி அதிக தொழில் நுட்ப வசதிகள் இன்னும் சரிவர வெளியாகவில்லை.

பட்ஜெட்டுக்கு தகுந்த வகையில் இந்த எச்டிசி கோல்ஃப் ஸ்மார்ட்போனின் விலை இருக்கும் என்று தாராளமாக நம்பலாம். எச்டிசி கோல்ஃப் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X