எச்டிசி ஃப்ளையர் மற்றும் மோட்டோரோலா சூம் டாப்லட் - ஒரு பார்வை

By Super
|
எச்டிசி ஃப்ளையர் மற்றும் மோட்டோரோலா சூம் டாப்லட் - ஒரு பார்வை
பல வருடங்களாக எச்டிசி நிறுவனம் பல மின்னணு சாதனங்கள் மற்றும் ஸ்மார்போன்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு அது 1.5ஜிகாஹெர்ட்ஸ் க்யூவல்காம் ஸ்நாப்ட்ராகன் ப்ராஸஸருடன் கூடிய புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகப்படுத்துகிறது.

இந்த புதிய எச்டிசி ஃப்ளையர் பிரிமியம் அலுமினியம் யூனிபாடி வடிவமைப்புடன் வந்திருக்கிறது. இதற்கு போட்டியாக மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா சூம் என்ற புதிய டேப்லெட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மோட்டோரோலாவின் மோட்டோரோலா சூம் 1ஜிகாஹெர்ட்ஸ் ப்ராஸஸருடன் புதிய ஆன்ட்ராய்டு 3.0 ஹனிகோம்ப் ஆபரேட்டிங் சிஸ்டத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சிலவற்றில் வேறுபட்டு இருந்தாலும் இரண்டுமே வசதிகளிலும், செயல்திறத்திலும் இரண்டு மொபைல்களுமே ஒரே தரத்தில் உள்ளன. அதாவது எச்டிசி ஃப்ளையரில் உள்ள ஜிஞ்சர்ப்ரீடு ஆன்ட்ராய்டு ஓஎஸ் 2.3 மோட்டோரோலா சூமின் ஹணிகோம் செய்திறனுக்கும் சமமான அளவில் இருக்கும்.

எச்டிசி ஃப்ளையர் மற்ற மொபைல்களில் உள்ளது போலவே ஜிஎஸ்எம் 850/900/1800/1900 2ஜி நெட்வொர்க் மற்றும் ஹச்எஸ்டிபிஎ 900/1700/2100 3ஜி நெட்வொர்க் சப்போர்ட்டைப் பெற்றுள்ளது. இதனடைய தனிச் சிறப்பு நாம் கையால் எழுதும் வசதிக்காக ஒரு மேஜிக் பேனாவை வழங்குகிறார்கள். அதன் மூலம் நாம் யூஸர் இன்டர்பேஸை எளிதாக கையாள முடியும்.

மறுபக்கம் மோட்டோரோலா சூம் டாப்லட் 10.1 தொடுதிரையுடன் 1280 X 800 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. ஆனால் எச்டிசி ஃப்ளையர் 7 இன்ச் எல்சிடி தொடுதிரையுடன் 600 X 1024 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. மேலும் இது மல்டி டச் இன்புட் திறன் கொண்டு லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ரைய்ட் கன்ட்ரோலைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா சூம் டூவல் வைபை ஹாட்ஸ்பாட்டுடன் கூடிய டூவல் பான்ட் வைபை 802.11 தொடர்பைக் கொண்டுள்ளது. மேலும் இதில் என்விஐடிஐஎ டெக்ரா 2 எபி20ஹச் டூவல் கோர் ப்ராஸஸர் மற்றும் மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட் வழியாக செயல்படும் ஹார்ட்வேர் அம்சங்களான மைக்ரோ யுஎஸ்பி செயல்பாடு மற்றும் மைக்ரோ ஹச்டி டிவி ஆகியவற்றையும் வழங்குகிறது.

மேலும் இது சிறந்த ரிசலூசன் கொண்ட டூவல் எல்இடி ப்ளாஸ் கொண்ட 5எம்பி கேமராவையும் வழங்குகிறது. 10 மணி நேரம் ஓடக்கூடிய இன்பில்ட் வீடியோ ப்ளேபேக் மற்றும் 3.3 நாட்கள் ஓடக்கூடிய இன்பில்ட்மியூசிக் ப்ளேபேக் மற்றும் இன்பில்ட் வெப் ப்ரவுசர் அகியவை இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

கடந்த மே மாதம் சந்தைக்கு வந்ததிலிருந்து எச்டிசி ஃப்ளையர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனுடைய பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் எஸ்என்எஸ் இன்டராக்ஷன், கூகுள் தேடல் ஆகியவை பயன்படுத்துவோருக்கு எளிதாக இருக்கின்றன. மோட்டோரோலா சூம் டேப்லெட்டின் விலை இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் எச்டிசியின் ஃப்ளையர் ரூ.25,990 விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X