எச்டிசி இவோ ஷிஃப்டு 4ஜி மற்றும் இவோ 3டி ஸ்மார்ட்போன்கள்: ஓர் சிறிய ஒப்பீடு

Posted By:

எச்டிசி இவோ ஷிஃப்டு 4ஜி மற்றும் இவோ 3டி ஸ்மார்ட்போன்கள்: ஓர் சிறிய ஒப்பீடு

மக்களின் கவனத்தை கவர்ந்த எச்டிசி நிறுவனத்தின் இவோ ஷிஃப்டு 4ஜி மற்றும் எச்டிசி இவோ 3டி ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம். எச்டிசி இவோ ஷிஃப்டு 4ஜி ஸ்மார்ட்போன் 3.6 இஞ்ச் டிஎப்டி தொழில் நுட்பத்தினை வழங்கும். எச்டிசி இவோ 3டி ஸ்மார்ட்போன், இவோ ஷிஃப்டு 4ஜி ஸ்மார்ட்போனையும் விட சற்று பெரிய திரையை கொண்டுள்ளது. இவோ 3டி ஸ்மார்ட்போனில் உள்ள 4.3 இஞ்ச் திரையின் மூலம் 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம்.

எச்டிசி இவோ ஷிஃப்டு 4ஜி மற்றும் எச்டிசி 3டி ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களிலுமே 5 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளதால் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியும் கிடைக்கும். எச்டிசி இவே 3டி ஸ்மார்ட்போன் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும், எச்டிசி இவோ ஷிஃப்டு 4ஜி ஸ்மார்ட்போன் முகப்பு கேமராவினையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் 2ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்கிறது.

எச்டிசி ஷிஃப்டு 4ஜி ஸ்மார்ட்போன் எல்ஐ-அயான் 1,500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டதால் 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 6 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும். எச்டிசி இவோ 3டி ஸ்மார்ட்போன் 1,730 எம்ஏஎச் பேட்டரியின் மூலம், 2ஜி வசதிக்கு 9 மணி நேரம் 20 நிமிடம் டாக் டைமையும், 3ஜி வசதிக்கு 7 மணி நேரம் 45 நிமிடம் டாக் டைம் வசதியினையும் கொடுக்கும்.

இந்த 3டி ஸ்மார்ட்போன் 2ஜி வசதிக்கு 358 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 3ஜி வசதிக்கும் 420 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் தரும். இந்த 2 ஸ்மார்ட்போன்களும் இன்னும் 3 மாதத்தில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்