Home
Mobile

அடுத்த மாதம் வெளியாகும் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்!

By Super

அடுத்த மாதம் வெளியாகும் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்!
எவிட்டா என்ற புதிய ஸ்மார்ட்போனை வருகிற ஜூன் மாதம் வெளியிட உள்ளது எச்டிசி நிறுவனம். எச்டிசி ஒன் எக்எல் இயூ, எச்டிசி எட்ஜ் என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் எச்டிசி எவிட்டா என்றும் அழைக்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போனுக்காக காத்திருக்கும் எச்டிசி வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய செய்தி ஒன்றும் காத்திருக்கிறது. ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனை எச்டிசி நிறுவனம் ஜூன் மாதம் வெளியிட போகிறது என்பது வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷத்தினை கொடுக்கும் விஷயம் தான்.

இந்த ஸ்மார்ட்போனின் அகன்ற திரை, இதன் தோற்றத்திற்கே ஒரு தனி தன்மை அளிக்கும் என்று கூறலாம். இதில் 4.7 இஞ்ச் அகன்ற திரை 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். மொபைல் என்றாலே தொடுதிரை என்பதும் சொல்லாமல் சொல்லும் வார்த்தையாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் தொடுதிரை வசதி கொண்டது.

திரை மட்டும் அல்ல இதன் கேமராவும் சிற்பபான அம்சத்தினை வழங்கும் என்று கூறலாம். 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். என்எப்சி தொழில் நுட்பத்தினை கொடு்க்கும் இந்த ஸ்மார்ட்போன், சிறப்பான ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் வசதிக்கும் வழி வகுக்கும்.

பிரவுசிங், 3ஜி நெட்வொர்க் போன்ற வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. ஜூன் மாதம் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X