Home
Mobile

புதிய விண்டோஸ் போனை களமிறக்கும் எச்டிசி?

By Super

புதிய விண்டோஸ் போனை களமிறக்கும் எச்டிசி?
புதிய ஸ்மார்ட்போனை எச்டிசி நிறுவனம் அறிமுகம் செய்வதாக வலைத்தளங்களில் செய்திகள் கசிந்துள்ளது.

இலேஷன் என்ற உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை எச்டிசி நிறுவனம் வழங்குவதாக நிறைய தகவல்கள் வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. உபன்ட்டூலைஃப்.நெட் வலைத்தளத்தில் இந்த புதிய எச்டிசி ஸ்மார்ட்போனின் புகைப்படம் கசிந்துள்ளது.

ஆனால் இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட நோக்கியா மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு, எச்டிசி நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் திரை வசதி கொண்டு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் எல்சிடி திரை தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.

இதில் 32 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும் பயன்படுத்தி கொள்ளலாம். இது மட்டும் அல்லாமல் இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் சிறந்த ஸ்மார்ட்போன் வசதியினை கொண்டதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெறலாம். என்எப்சி, வைபை மற்றும் ப்ளூடூத் 4.0, ஆடியோ ஜேக் போன்ற வசதிகளையும் இதில் பெறலாம்.

இருப்பினும் இந்த புதிய எச்டிசி இலேஷன் ஸ்மார்ட்போன் பற்றி இன்னும் தெளிவான தகவல்கள் வரும்வரை சற்று காத்திருக்க வேண்டியுள்ளது. தெளிவான விவரங்கள் வெளியான பின்பு இதன் விலை பற்றி விளக்கங்களும் தெரிய வரும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X